ஏப்ரல் 2012 ஞானத்திருவடி நூலிற்கு மகான் ஒளவையார் அருளிய ஆசி நூல்

ஞானத்திருவடி நூலிற்கு
மகான் ஒளவையார் அருளிய ஆசி நூல்

சுவடி வாசித்தளித்தவர் A.S.துரைகணேசன், செல் : 94439 58639
மகான் அகத்தியர் நாடி ஜோதிட நிலையம், தட்டாஞ்சாவடி, புதுச்சேரி. 10.01.2012

அத்திமுக கண நாத சக்தி மைந்தா
ஆதிசக்தி அருந்தவத்தால் உதித்த பாலா
சித்திபுத்தி இருவர்தனை மணந்த நாதா
சிவனிடத்தில் ஞானகனி வென்ற தேவா

தேவனே உனை வணங்கி ஒளவை யானும்
தேடிவந்தேன் புண்ணிய லோகம் ஓங்காரக்குடிலுக்கு
தவம்கொண்ட அரங்கனை கண்டு மகிழ்ந்து
தவமகிமை கூறுகின்றேன் உற்று கேட்பீர்

உற்றதொரு உயர்நிலை அடைந்தவன் அரங்கன்
உயிர்காக்க உடல்வளர்க்கும் உபாயம் கண்டான்
குற்றமெனும் கொடிய நஞ்சு பூதவுடலை
கூற்றிந்து விட மகற்றி ஒளிதேகம் பெற்று

பெற்றுமே பரபிரம்மமெனும் பரமாத்மாவை
பூரணமாய் தன்னகத்துள் கண்டவன் அரங்கன்
சொற்பதம் கடந்த துரியமெய் ஞானி
சதாசிவம் கண்டு கடவுள் நிலையில்

நிலையான பேரின்பம் நிறுத்தித் தன்னுடலில்
நித்தியமான சத்திய குருவே
உலகின் நிலையை உணர்ந்து கொண்டு
உயிர்களையெல்லாம் காத்திட வேண்டி

வேண்டியே மானிட உருவம் பெற்ற
வேதங்கள் அறிந்த வித்தக அரங்கா
கண்டுன்னை வாழ்த்தி கலியுகம் காக்க
கயிலையில் இருந்து ஓடோடி வந்தேன்

வந்திட்டேன் உனக்கு பணி செய்வதற்கு
வள்ளுவருக்கும் எனக்கும் அகத்தியர் அளித்த
சுந்தர தமிழில் ஏற்றிய நூலை
சுத்தமாய் எழுதி அரங்கா நீயும்

நீதானும் இப்புவியில் மானுடம் காக்க
நித்தமும் என் குரு அகத்தியர் கூடி
ஓதியே அழைத்து குருவருள் பெற்று
உலகில் பெற்ற புண்ணியம் கோடி

கோடியில் ஒருவன் நீ தருமத்தின் தலைவன்
கலியுகம் காக்கவந்த கருணா மூர்த்தி
தேடியே வந்து தேனெனும் தமிழால்
தன்னை வாழ்த்தி வரமருள வந்தேன்

வரம்பெற்ற அரங்கா எங்கள் காலம்பின்
வாழ்கின்றாய் உலகில் சுத்த ஞானியாய்
பரமனின் அருளடி இறுகப் பிடித்து
பூலோகம் காக்கும் புண்ணிய ஞானியே

ஞானியே கலியுகத்தில் உன்னைக் கண்டு
நான் மகிழ்ந்து #ஓங்காரக்குடில் அமர்ந்திருக்கேன்
தான் செய்யும் தொண்டிற்கு பணிபுரிய வேண்டி
தானத்தையும் தவத்தையும் கண்டு மகிழ்ந்தேன்

அழிந்திடும் மானிடத்தை உன்பணி காக்கும்
அரங்கனே மானிடர்கள் அறியவில்லை
அழகான மனிதப்பிறப்பு அடைவது அரிது
அருள் பெற்றால் ஆனந்தம் அடைந்திடலாமே

அடைந்திடவே பொன்பொருள் ஆத்திச் செல்வம்
அலைகின்றான் தேடி தேடி நரக வாழ்வை
கடைத்தேற்ற பிறவியதை மானிடனாக
காலத்தில் பிறந்தநிலை மறந்து விட்டு

மறந்துவிட்டு மாளிகையை கல்லால் கட்டி
மனைவி சேய்கள் பொருள்கோடி உள்ளதை எண்ணி
இறப்பொன்று இருப்பதை மறந்து விட்டு
எல்லாமும் நிலையென்று எண்ணி எண்ணி

எண்ணியே ஒருநாள் இறந்து போவான்
எண்ணற்ற கோடி பேர் இறப்பதைக் கண்டு
கண்டுமே மாந்தர் கூட்டம் அறியாநின்று காலமெல்லாம் இப்படியே கண்டதாலே

கண்டதொரு நிலைமாற்றி சித்தர்கள் வந்தோம்
கூறிட்டாலும் அறநூல்கள் பலதும் கூட
எண்ணத்தில் ஏற்கவில்லை மானிட வர்க்கம்
எண்ணற்ற மனிதகுலம் காக்க வேண்டி

வேண்டி வந்து ரெங்கராச தேசிகனும்
வரம் தந்து வாழும் முறை பலகலைகள்
கண்டறிந்து பழந்தமிழை எளிய உரையில்
கலியுகம் காக்கும் குரு அரங்கராசன்

ராசகுலம் பல சித்தர் குலத்தில் அவதரித்து
உலகம்காக்க பல தொண்டு பலசென்மம் தன்னில்
ராசரிஷியாய் இப்பிறப்பு அடைந்து வந்து
இரவுபகல் கடுந்தவம் செய்வதாலே

செய்வதாலே சித்தர்கள் துணையும் கொண்டு
சீற்றங்கள் பஞ்சபூத அழிவை அகற்றி
உய்யவே உலக உயிர் காத்து நிற்கும்
ஓங்கார ஞானகுரு அரங்கா வாழ்க

வாழுகின்ற மானிடனும் தான தருமம்
வழுவாது இறைபூசை செய்வதைக் கண்டேன்
ஊழகன்று உயர்கதி அடைய வேண்டி
ஒருவரும் தானதருமம் செய்திடவில்லை

செய்கின்ற தானதருமம் நோக்கம் வைத்து
சான்றோரும் ஆன்றோரும் மகிழ வேண்டும்
பொய்யான புகழுக்கு மதிமயங்கி
பொருள்கோடி தானதருமம் செய்தால் கூட

கூடவரா புண்ணியங்கள் பொருளழியும்
குருமார்க்கம் அறிந்துமே திருவடி பணிந்து
அடியவருக்கு அடியவராய் நின்று மாந்தர்
அறம்செய்வோர் வினையகன்று அருள் நிலைப்பெறுவார்

அருளுலகில் ஆதியெனும் மகாசக்திக்குள்
அமர்ந்து தவம் செய்கின்ற அரங்கன் மட்டும்
பேருலக பிரபஞ்ச ரகசியத்தை
பரமானந்த அரங்கராசன் அறிந்ததாலே

அறிந்ததினால் அகத்தியர் முதலான சித்தர்களெல்லாம்
அரங்கன்வாழும் ஓங்காரக்குடில் சபைக்கு வந்து
அறம்செய்ய அரங்கன்சொல் சித்தர்கள் கேட்டு
அகிலம்காக்க அன்னதானம் பெருகச் செய்தோம்

செய்திட்ட அரங்கர் கடுந்தவத்தால் .
சித்தர்கள் துணையிருந்து உலகம் காத்தார்
அய்யம் அகற்றும் அரங்கனின் வழிபாடு அல்லல் அறுப்பான் அரங்கனின் சொல் கேட்டால்

சொல்லுவது அகத்தியர் அரங்கனின் திருவுருவில்
சிவஞானி உருவில் சித்தர்கள் பல்லோரும்
விலகாமல் நின்று வாழ்வதை கண்டேன்
வாழுகின்ற தேவரிடி அரங்கனைக் கண்டால்

கண்டிட்டால் நவகோடி சித்தர்கள் ஆசி
காலத்தில் ஓங்காரக்குடில் ஆலயத்தில்
வண்ணமாய் சித்தர்களும் அமர்ந்து தவத்தில் வருவோருக்கு வினையகற்றி வாழ்வருளக் கண்டேன்

கண்டதொரு நல்மனதை தூய்மையாக்கி
கடுந்தவம் செய்கின்ற ஞானியை வணங்க
அண்டியே வருவோருக்கு நவநிதி சேரும்
ஆயுள் நீளும் பிணிகள் தீரும்

தீர்ந்துவிடும் நவக்கோள் குற்றங்களெல்லாம்
தீரா வினைதீர்க்கும் ஓங்காரக்குடில் அன்னம்
ஆராத இன்பம் அரங்கனருளால்
அடைந்துமே மானிடம் தழைத்தோங்கி வாழும்

வாழவே மானுடம் காக்கவே வேண்டி
வந்துரைத்தேன் ஒளவையும் அரங்கனின் மகிமை
ஊழகற்றும் அரங்கனிடம் ஓடோடி வந்து
உலக மக்கள் வணங்கியே பெருவாழ்வு காண்பீர்

கண்டுமே வணங்கி குருவருள் பெற்றால்
கவலைகள் தீர்க்க சித்தர்கள் கூடி
எண்ணம்போல் வேண்டுவோர் குடிக்கு வந்து
எண்ணற்ற அருள்வரம் அளித்து மகிழ்வேன்

மகிழ்ந்துரைத்த என துவாக்கு மானிடம் கேட்டு
மாசில்லா சோதியும் வீட்டிலேற்றி
அகத்தியர் முதலான சித்தர்களை அழைத்தால்
அக்கணம் வந்து அருள்பாலிப்போமே

#ஞானத்திருவடி நூலை வாங்குகிறவர்கள், #நல்லெண்ணெய் அல்லது #நெய் தீபமேற்றி சித்தர்கள் போற்றித் தொகுப்பை சொல்லி இறுதியில் ஓம் அகத்தீசாய நம என்று 12 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் பூஜை செய்பவர்களது குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீருவதோடு அவர்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தும் சித்திக்கும் என்பது மகான் ஒளவையார் வாக்காகும்.

அருள் பெற்ற அரங்கனும் வேண்டியே அழைத்து
அகிலம் காக்க வழிகள் கேட்டார் அருளியே ஞானத்திருவடி நூலில் ஒளவையும் உறைந்து வாழுகின்றேனே வாழுகின்ற சித்தர் நூல் தொடுவோர் புண்ணியம் வினையறுக்கும் அருமருந்து நூலை வாழுகின்ற அரங்கன் அருள்வரம் கிட்டும்
வணங்கியே அகத்தியத்தை அரங்கனை வாழ்த்தி 35. அரங்கா உன் அருந்தவம் உலகைக் காக்கும்
ஒளவையின் துணையுண்டு அருகில் நிற்பேன் சரவணபவனே சண்முக குருவே சர்வலோகம் காத்துமே வாழ்வாய் முற்றே.
-சுபம்
34.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0167099
Visit Today : 32
Total Visit : 167099

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories