சுழுமுனை ரகசியம் | opening of third eye of lord shiva | வாசி யோகம் என்றால் என்ன | வாசி யோகம் செய்யும் முறை | agathiyar puruvamathy | மூன்றாவது கண் இரகசியம், Opening the third eye activation

சுழுமுனை ரகசியம், opening of third eye of lord shiva, #வாசி யோகம் என்றால் என்ன, வாசி யோகம் செய்யும் முறை, agathiyar puruvamathy, மூன்றாவது கண் இரகசியம், Opening the third eye activation, புருவமத்தியில் கடவுள், புருவமத்தி தியானம், third eye meditation, அகத்தியர் தியானம், ஞானிகளின் கதைகள், சித்தர்கள் சக்தியை பெறுவது. எப்படி, சித்தர்கள் வரலாறு, சித்தர்கள் அமானுஷ்யம், வாசி யோகம் செய்வது எப்படி

third eye meditation opening of third eye of lord shiva Opening the third eye activation agathiar in puruva center secret of human body 

பத்தாம்வாசல் என்று சொல்லப்பட்ட இடத்தில் #மூச்சிக்காற்று தங்கிவிட்டால் #ஈளை #இருமல் இருக்காது. கவத்தை அறுத்துவிடும். அது எல்லா வேலையும் செய்யும் கவத்தை அறுக்கும், நரை திரை மூப்பை அறுக்கும், நல்ல #சிந்தனை வரும், தெளிவான சிந்தனை வரும். அப்போ வழி அடைந்துவிட்டது. இந்த பக்கம் போகின்ற காற்றை அந்த பக்கம் செலுத்திவைத்தான் அது ஒரு பகுதி. அப்போ ஞானிகள் ஆசி இல்லாமல் முடியாது. அந்த காற்று புருவமத்தியில் ஒடுங்கும் போதே யாரை வணங்கினோமோ, யாரை பூஜை செய்தோமோ அவன்தான் ஒடுங்குவான் உள்ளே. ஆசான் அகத்தீசன்தான் இதற்கு முதல் காரணம். சுப்ரமணியருடைய முதல் சீடர் அகத்தீசர். அவர்தான் செய்ய முடியும் இதை. அவர்தான் உடம்புக்குள்ளே தங்கமுடியும். ஆசான் ஞானபண்டிதனும் தங்கலாம். வேலை அவருக்குதான். அப்போ என்ன செய்கிறார்கள் அகத்தீசனையோ, திருமூலதேவனையோ பூஜை எல்லாம் ஒன்றுதான். நீ யாரை வணங்கினாலும் அகத்தீசன்தான் செய்து தர வேண்டும். அவர்தான் அக்னியை எழுப்ப வேண்டும். மூலாதாரத்தில் இருந்து #அக்னி எழுப்ப வேண்டும். வேற யாருக்கும் அந்த உரிமை இல்லை. அப்போது ஆசான் என்ன செய்கிறார்? எந்த ஞானியை வணங்கினாலும் எல்லாம் நான்தான் அப்பா. திருமூலதேவா என்றால் அதுவும் நான்தான். என்னுடைய பிள்ளைதான் அவன். #புஜண்டமகரிஷி அவனும் என் பிள்ளைதான். போகமகாதேவன் அவனும் என் பிள்ளைதான், #இராமலிங்கசுவாமிகள் அவனும் என்பிள்ளைதான். எல்லாமே என் பிள்ளைதான். என் பிள்ளைகள் நாமத்தை சொன்னதுனால எனக்கு தெரியும். எந்த நோக்கத்தோடு எங்கள் பிள்ளைகளை வணங்கினாய் என்றால்? அடியேன் ஆன்மஜெயம் பெற வேண்டும். #ஆன்மஜெயம் என்றால் மூச்சிக்காற்று வசப்பட வேண்டும். மூச்சிக்காற்று வசப்பட்டால் இனி பிறப்பிருக்காது.
“வாழ்நாள் வழி அடைக்கும் கல்”
அப்போது ஆசான் என்ன செய்கிறார்? புண்ணியம் செய்த புண்ணியவான் நல்ல பிள்ளை. ஆசான் அகத்தீசரிடம் நல்ல பிள்ளை அப்படின்னு பேரெடுத்துட்டான். ஆசான் அகத்தீசர் நல்ல பிள்ளைன்னு சொன்னால் ஒன்பது கோடி ஞானிகளும் ஆமா நல்ல பிள்ளைனு சொல்லுவான். அப்போ பூஜை செய்றான். வீழ்ந்து வணங்குறான். அப்போ என்ன செய்கிறார்? திருமூலர் சொல்றார்.

“அந்தமில் ஞானி அருளை அடைந்தாக்கால்”
முடிவில்லாதவன். ஆதி என்பது தொடக்கம். அந்தம் என்பது முடிவு. ஞானிகளுக்கு மரணம் இல்லை.
“அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய் திருந்திடில்”
-திருமந்திரம் 1913

குகை என்பது புருவமத்தி. பத்தாம் வாசல். அந்த குகைல செல்லவேண்டும். “அந்த உடல்தான் குகைசெய் திருந்திடில்” இருந்திடில். தலைவனிடம் இவன் செலுத்துகின்ற பக்த்தியும், அந்த பரிவும், நல்லபிள்ளை என்று ஆசான் முடிவெடுத்துவிட்டால், அகத்தீசர் நான் வருகிறேன் மகனே! என்ன கேட்கின்றாய்? அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். அடியேன் ஆன்மஜெயம் பெற வேண்டும். அடியேன் மரணமில்லா பெருவாழ்வு. அப்போ மரணமில்லா பெருவாழ்வுனா? உடம்பில் இருக்கும் காற்று வெளியில் போனால் மரணம். உள்ளே வந்தால் பிழைசிக்கிட்டு இருக்கான். அது இரண்டுக்கிடையில் பத்தாம் வாசலில் செலுத்திவிட்டால் மரணமில்லை. காற்று வந்துபோனால் மரணம் உண்டு. காற்று வந்துபோகவில்லை. அப்போது ஆசான் என்ன செய்கிறார்? அந்த பக்குவம் வந்தது. பக்குவம் வரவரையில் அமைதியாக இருக்க வேண்டும். எப்போது ஆசான் மனம் மகிழ்கிறாரோ அது வரையில் பொறுமையாக இருக்கனும். அப்போது என்ன செய்கிறார்?

“அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய் திருந்திடில்”

அந்த உடம்புக்குள்ளே புருவமத்தியாகிய குகைசெய் திருந்திடில். குகை என்பது ஓட்டை, வாசல்

“சுந்தர மன்னருந் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே”

மன்னனாக இருந்தாலும் சரி. அவன் பருதேசி பயலா இருந்தாலும் சரி. ஏழையா இருந்தாலும் சரி “சுந்தர மன்னருந் தொல்புவி யுள்ளோரும்” தொல்புவினா இந்த உலகத்துல. உலகத்தில் யாராக இருந்தாலும் சரிதான். அவன் சக்கரவர்த்தியா இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனா இருந்தாலும் சரி “சுந்தர மன்னருந் தொல்புவி யுள்ளோரும் அந்தமில் இன்ப அருள்பெறு வாரே” முடிவில்லாத பேரானந்தத்தில் இருப்பார் என்று சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 57
Total Visit : 204428

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version