பூஜை செய்ய நேரம் இல்லையே? பல பிரச்சனை இருக்கிறதே? பூஜை செய்ய நேரம் என்று அவசியமில்லை. நீபாட்டுக்கு போகும்போது ‘அகத்தீஸ்வரா! அகத்தீஸ்வரா! அகத்தீஸ்வரா! அகத்தீஸ்வரா!’ என்று போய்க்கொண்டே இருந்தான். அப்ப பார்க்கிறார் உன்னை ஆசான். இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. இவ்வளவு பிரச்சனையிலும் ஒரு பக்கம் குடும்பத்தில் பிரச்சனை கடன் சுமை இருக்கிறது. இதற்கிடையில் பூஜை செய்ய நேரம் இல்லை உனக்கு. பரவாயில்லை. உன் பூஜையை நான் ஏற்றுக் கொள்கிறேன் அப்பா! என்பார். ‘அகத்தீஸ்வரா! ‘ என்று இவ்வளவு தடுமாற்றம், பிரச்சனை இருக்கும் நேரத்திலும் நாமத்தைச் சொல்கிறான் அல்லவா? ‘அப்பா! நல்லபிள்ளை’ என்று சொல்லிவிடுவான். அப்ப நாமத்தை ஒரு இடத்திற்கு போகும்போது, பஸ்ஸில் செல்லும்போது, குளிக்கும்போது, சாப்பிடும்போது ‘அகத்தீசா!’ என்று சாப்பிடுகிறோம். ‘அகத்தீசா’ என்று படுக்கிறான். குளிக்கும்போது ‘அகத்தீசா’ என்கிறான். இப்படியே சொல்லிக்கொண்டு இருக்கிறான்.
சொல்லச் சொல்லச் சொல்ல வினைகள் தீர்கிறது. பிரச்சனைகள் தீர்கிறது. மனம் சாந்தம் உண்டாகும். அப்ப இந்த துறைக்கு என்ன அவசியம்? உடல் ஆரோக்கியம் அவசியமா? ஆம்! உடல் ஆரோக்கியம் அவசியம்தான். உடல் ஆரோக்கியத்திற்கு என்ன உபாயம்? உள்ளம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உள்ளம் ஆரோக்கியத்திற்கு என்ன துணையாக இருக்க வேண்டும்? பக்தி இருக்க வேண்டும். பக்தி யாரிடம் இருக்க வேண்டும்? ஞானிகளிடம் இருக்க வேண்டும். ஞானிகள் ஆசி இல்லாமல் உடல் ஆரோக்கியமும் உள்ள ஆரோக்கியமும் இருக்காது. அப்ப இரண்டும் துணையில்லாமல் ஒருவன் பூஜை செய்ய முடியாது. ஆக இந்த துறை இப்படித்தான் அமைந்துள்ளது. பல ஆண்டுகள் ஆகலாம். பல ஆண்டுகள் ஆகும். ஒரு ஆண்டு இரண்டாண்டல்ல. எப்போது ஆசான் மனம் இறங்குகின்றானோ, அன்று இரங்கட்டும். நாம் கடமையைச் செய்கிறோம். எல்லா விசயத்திலும் இருப்பான். இல்லறத்தை நடத்துவான். விருந்தை உபசரிப்பான். அன்னதானம் நடத்துவான். உத்தியோகம் செய்வான். வியாபாரம் செய்வான். எல்லா வேலையும் செய்வான். சிந்தனை மட்டும் ஞானிகள் பேரில் இருக்கும். அவன் பெரிய ஆள். எல்லாம் செய்வான். வியாபாரம் செய்வான். அரசியல் நடத்துவான். அரசாட்சியே செய்வான்.
ஆனாலும் சிந்தனை மேல் நிலையில் இருக்கும். அப்போது என்ன செய்வார்கள், திருமூலர் சொல்வார்,
பள்ள முதுநீர் பழகிய மீனினம்
வெள்ளம் புதியவை காண விருப்புறும்
கள்ளவர் கோதையர் காமனோடாடினும்
உள்ளம் பிரியா ஒருவனை நாடுமே
-திருமந்திரம்- கவி எண் 3066
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒரு மடுவில் தண்ணீர் இருக்கும். அதில் மீன் இருக்கும். பல ஆயிரக்கணக்கான ஆண்டு மடு. அந்த காலத்தில் விண்கற்கள் வீழ்ந்ததனால் ஒரு பெரிய மடு இருக்கிறது. அல்லது கல் வெட்டியதால் வந்திருக்கலாம். மடுவில் பல லட்சம் வருடம் தண்ணீர் நிற்கும். மீன்கள் அதில் இருக்கும். கிட்டத்தட்ட ஓராள் உயரம் இருக்கும். ஐந்தடி ஆறடி ஆழம் இருக்கும். ஆனால் மழை பெய்து புதுத் தண்ணீர் வந்தால் இத்தனை வருடம் லட்சக்கணக்கான ஆண்டுகள் இருக்கிறோமே என்று அந்த மீன்கள் நினைக்காது. புதுத்தண்ணீர் வந்தால் போய்விடும்.
பள்ள முதுநீர் பழகிய மீனினம்
வெள்ளம் புதியவை காண விருப்புறும்
புதிய நீர் வந்தால் அதில் போய் விடும். அதுபோல் ஞானிகள் என்ன செய்வார்கள்? இல்லறத்தில் இருப்பான். வியாபாரம் செய்வான். எல்லாம் செய்துகொண்டே இருப்பான். சிந்தனை மட்டும் ‘அகத்தீஸ்வரா! அகத்தீஸ்வரா!’ என்று சாப்பிடும்போது அகத்தீஸ்வரா! பேசும்போது அகத்தீஸ்வரா! வியாபாரம் செய்யும்போது அகத்தீஸ்வரா! ஒரு அதிகாரியிடம் பேசவேண்டும். எதை வேண்டுமானாலும் செய்து கொண்டிருப்பான். ஏர் உழுதுகொண்டே இருப்பான். அகத்தீஸ்வரா அகத்தீஸ்வரா! என்று போவான். நெல் அறுத்துக்கொண்டே இருப்பான். ‘அகத்தீசா! அகத்தீசா!’ என்பான். சாப்பிடும் போது ‘அகத்தீசா! அகத்தீசா!’ என்பான். சிந்தனை மட்டும் மேல்நிலையிலேயே இருக்கும்.
எவ்வளவு பெரிய அறிவு? எவ்வளவு பெரிய ஆற்றல் அது? பெரிய அறிவு அது! இந்த மாதிரி நினைப்பு எப்போது பார்த்தாலும் இதே சிந்தனையாக இருப்பது என்று சொன்னால், ஆசானைக் கேட்கணும். “அப்பா! எப்போது பார்த்தாலும் சிந்தனையே இருக்கே தவிர மனைவி, மக்கள், குடும்பம், வியாபாரம் இதைப்பற்றி இருக்கே தவிர, உன் நாமத்தைச் சொல்ல யோக்கியதை இல்லையே? அவ்வளவு பெரிய பாவி ஆகி விட்டேனா நான்? நீங்களெல்லாம் பெரியவங்கதானே? நாமத்தைச் சொல்ல அருள் செய்யக் கூடாதா? பூஜை செய்யவும் தனி இடம் இல்லை. சின்ன வீடாக இருக்கிறது. குடும்பத்தில் பிள்ளைகள் பிரச்சனை இருக்கிறது. வெளியே வந்தாவது உங்கள் நாமத்தை சொல்வதற்கு நினைப்பு இருக்க வேண்டுமல்லவா? ஏதேதோ நினைக்கிறேனே? 24 மணி நேரமும் தேவையில்லாத நினைப்பை நினைத்துக் கொண்டிருக்கிறேனே? உன் நாமத்தைச் சொல்வதற்கு வாய்ப்பு தரமாட்டேன் என்கிறாயே ஏன்? நீர் தான் அருள் செய்ய வேண்டும் என்பான்.