ஓங்காரக்குடில் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் 
சமீபத்தில் ஒரு நண்பர் திருமண பத்திரிக்கை வந்தது அதில் “தவத்திரு அரங்க மகா தேசிக சுவாமிகள் ஆசியுடன்” இருந்த்தது. அதிர்ச்சி அடைந்தேன் கொஞ்சம் பயமாகவும் இருந்தது
40 வருடங்களாக ஓங்காரகுடில் செயல்பட்டு வந்தாலும் ஆயிரகணக்கான மக்கள் வந்து போனாலும் மிக குறைந்த அளவு ஆன்பர்களே நீடித்து இருக்க முடிந்ததை என்னுடைய மூன்று வருட அனுபவத்தில் உணர்ந்தது
மகான் அரங்கரின் அவதாரமும் ஓங்காரகுடில் அமைத்ததின் நோக்கமே உலகில் தமிழன் அடைந்த உண்மை ஆன்மீகமான மரணமில்லா பெருவாழ்வை மலர வைப்பது.
அவதார நோக்கங்கள்:
1.கோடிகணக்கான மக்களை (மரணத்தை வென்ற) ஞானிகள் நாமத்தை சொல்ல வைப்பது.
2.மந்திரம் தந்திரம் யாகம் யோகாசனம் சக்கரம் குண்டலி மூச்சுப்பயிற்சி என்று மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் போலி ஆன்மீக வாதிகளிடமிருந்து நல்வழி காட்டி மக்களை காப்பாற்றுவது.
3. புற சடங்குகளில் இருந்து விடுபட்டு தியானமும் தானமும் தான் (பாவ புண்ணியம்) உண்மை ஆன்மிகம் என்று சொல்வது மட்டும் அல்லாது செய்தும் காட்டுவது.
அன்பர்கள் செய்யவேண்டியவை 
1. யார் யாரெல்லாம் மனிதனாக பிறந்து உடலை உயிரை அறிந்து மரணத்தை வென்று ஐந்தொழில் செய்யும் வல்லமை பெற்றாரோ அவர் திருவடியை வணங்குவது.
2. சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் பார்வையாலும் உணவாலும் எந்த பிற உயிருக்கும் துன்பம் தராமல் இருப்பது.
3. அவரவர் வசதிக்கு ஏற்ப பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவது.
உலகெங்கும் ஞானிகள் பெருமை பேசி (முருகன், அகத்தியர், போகர், அருணகிரி பட்டினத்தார் வள்ளல் பெருமான் போன்ற) அவர்களை பூஜிக்க சொல்வது 
4. எத்தனை இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் ஆசானே சரணம் என்று ஆசானை கேட்டு அவர் என்ன சொனாலும் அதை அப்படியே ஏற்று (அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும்) அதை பின்பற்ற வேண்டும்.
அன்பர்கள் செய்யக்கூடாதவைகள்:
1. பல நன்மைகள் செய்து மகான் போல வாழ்ந்து கடைசியில் இறந்தவர்களை பூஜை செய்யகூடாது.
2. ஆடு கோழி வெட்டும் கோயிகளுக்கு போக கூடாது.
3.  யோக பயிற்சி, மூச்சு பயிற்சி செய்யகூடாது. அது சார்த்த அமைப்புகளை பாராட்டுவது. அவற்றிற்கு பொருளுதவி செய்வது போன்றவை உலகின் பாவ செயல்களாகும்
4.  எந்த சூழ்நிலையிலும் அய்யா எனக்கு தெரியவில்லை நான் என்ன செய்யவேண்டும் என்று பணியவேண்டுமே தவிர, புத்திசாலி போல் நினைத்துக்கொண்டு நான் இதை செய்யட்டுமா இப்படி செய்யட்டுமா என்று அனுமதி கேட்ககூடாது.
5. தரும பணிகளில் சுயநலமோ கையாடலோ இருக்ககூடாது.
பூரண சரணாகதி அடைந்தவர்களுக்கு எப்பொழுது அவரவர் பக்திக்கும் தொண்டிற்கும் புண்ணியத்திற்கும் ஏற்ப என்ன கிடைக்கவேண்டுமோ அது தானே கிடைக்கும் துன்பம் வரும்போது அரணாக வந்து காப்பர் அரங்கன்.
மீறுபவர்கள் எத்தனை தொண்டு செய்தாலும் எத்தனை கோடி பொருளுதவி செய்தாலும் அதற்க்கு மட்டும் பத்து மடங்காக பலன் பெறலாமே (நன்றி உள்ள ஞானத்துறை பாவ புண்ணியத்தை கடன் வைத்துகொள்ள மாட்டார்கள் மகான்கள் எப்பதால்) தவிர முழு பாதுகாப்பையும் அருளையும் பெற முடியாது. 
அனைத்தையும் பற்றறுத்து துறவியாக இருப்பதால் அரங்கர் காட்டும் கருணையை அன்பை பாசமாக நினைக்க வேண்டாம். 
இது எனக்கு தோன்றிய கருத்துதானே தவிர யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. குற்றம் குறை இருந்தால் என்னை மன்னித்துவிடவும்.
“ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம் சரணம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 769
Total Visit : 185179

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version