நீ என்ன பாடுபட்டாலும், உன் அறிவுக்கு எட்டாது. எட்டாத ஒன்றை சிந்திக்க நேரமில்லை. திருவடியைப் பற்று; நாமஜெபம் செய்.
“ஓம் அக்த்தீசாய நம”
பிடி! ஆசான் அகத்தீசனை! அவர்தான் சொல்வார்
சிறை உடல் நீஅறக்காட்டி சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கியாமே என்றார்.
திருமூலதேவனோ, அகத்தீசனோ, நந்தீசனோ, போகமகாரிஷியோ ஆசியில்லாமல், ஒருவன் இந்த வாய்ப்பைப் பெறமுடியாது. அப்ப நாம் என்ன செய்கிறோம்? இப்ப ஞானச் சித்தர் காலம் என்பதனாலே, அவரவர்கள் பூஜை செய்து உலகெங்கும் பரப்புதல் வேண்டும். ஞானிகள் பெருமையைப் பேசுதல் வேண்டும். கூட்டு வழிபாடு செய்தல் வேண்டும்.
கூட்டுவழிபாடு செய்வதில் இரண்டு வகையில் நன்மை இருக்கிறது. ஒன்று இல்லறத்தானுக்கு நோய் தீரும். மன அமைதி இருக்கும். அடுத்து அவன் அடையக்கூடிய லட்சியத்தினை அவனுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும். உன் முயற்சியால் ஆகாது. நீ என்ன பாடுபட்டாலும், உன் அறிவுக்கு எட்டாது. எட்டாத ஒன்றை சிந்திக்க நேரமில்லை. திருவடியைப் பற்று; நாமஜெபம் செய்.
எவ்வளவு ஆண்டு என்று? கேட்டான். “என்று உனக்குச் சிறை உடல் நீ அற காட்டுகின்றானோ அதுவரையிலும் பூஜை செய்” என்றான். நோக்கம், இப்ப பதிவு செய்யும் பதிவு நாடா எதற்கு என்று கேட்டால், இந்தப் பதிவு நாடா உலகெங்கும் போக வேண்டும். மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம் இப்போது.
அடிப்படை லட்சியம், மனித வர்க்கம் அடையக்கூடிய ஆன்மலாபம் அடைய வேண்டும். நாம் அதற்கு விளக்கம் தந்து கொண்டிருக்கிறோம். ஆகவே,இப்ப இந்தச் சங்கம் மன அமைதிக்காக மட்டும் பேசவில்லை. முடிவு, நிறைவு; அந்த நிறைவு எது என்று கேட்டான். இனிப் பிறவாமைஎன்று ஒன்று உண்டு. அதுதான் நிறைவு. அதை அடைவதற்கு நாம் தலைவனை அறிமுகப்படுத்திப் பேசிக்கொண்டிருக்கிறோம்.