சித்த மருத்துவம் பாகம் 13 – உடம்பைப் பற்றி அறிவு நமக்கு இல்லை

72,000 நாடி நரம்புகளும் மனம், புத்தி, சித்து, அகங்காரம் என்ற கருவி கரணங்கள். அடுத்தது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறியையும், புலனையும் இதுதான். மொத்தம் 14 கருவி கரணங்களயும் இயக்கிக் கொண்டிருக்கும்

அப்ப சிறை உடல் நீ அறக் காட்டி  சிவத்தோடு  என்றார். அப்ப ஆன்மா சிறைப்பட்டுக் கிடக்கிறது. எந்த உடம்புள்ளே? காம தேகத்தில்; மும்மலக்குற்றமாகிய ஆணவம், கன்மம், மாயை அல்லது மல ஜல சுக்கிலம் அல்லது மல ஜல சுரோணிதம் ஆகிய அந்த மலச் சேர்க்கையாகிய மலப்பிண்டமாகிய அதற்குள் ஒரு சுடர் இருக்கிறது. அதை வெளிப்படுத்திக் காட்டணும் என்றார்.  அதை,

                                மட்டகன்ற நெடுங்கால மனத்தால் வாக்கால்

                                    மதித்திடினும் புலம்பிடினும் வாராதென்றே

                        கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கி

                                    கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை

                                விட்டகன்று கருமமல போதம் யாவும்

                                    விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்

                        சுட்டகன்று நிற்க அவர் தம்மை முற்றுஞ்

                                    சூழ்ந்து கலந்திடும் சிவமே துரியத் தேவே.

                                    -திருவருட்பா -மகாதேவமாலை-கவி எண் 57

                                மட்டகன்ற நெடுங்கால மனத்தால் வாக்கால்

                                    மதித்திடினும் புலம்பிடினும் வாராதென்றே

                        கட்டகன்றமெய்யறிவோர்

கட்டு என்றால் மலக்கட்டு.  அந்த மலக்கட்டை உடைத்தெறிய வேண்டும். அந்த மலக்கட்டை உடைத்தெறியாமல் நீக்க முடியாது.

                                கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கி

                                    கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை

                                விட்டகன்று கருமமல போதம்   என்றார்.  அப்ப

                                சிறை உடல் நீ அறக்காட்டி.  அப்ப இந்த ஆன்மா கரும மல போதம் என்றார். இந்த உடம்பு இருக்கிறது.  சாப்பிடுகிறோம். அது சத்து அசத்து பிரிக்கும். அசத்தை வெளியே தள்ளும். சத்தை உடம்புக்கு ஏற்றும். அது 72,000 நாடி நரம்புகளை முறுக்கேற்றும். 72,000 நாடி நரம்புகளும் மனம், புத்தி, சித்து, அகங்காரம் என்ற கருவி கரணங்கள். அடுத்தது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறியையும், புலனையும் இதுதான். மொத்தம் 14 கருவி கரணங்களயும் இயக்கிக் கொண்டிருக்கும். அப்ப 72,000 நாடி நரம்புகளுக்கு ஊட்டச் சத்து தருவது நாம் சாப்பிடும் உணவு. அசத்தை நீக்கி சத்தை ஏற்றி விடும். சத்து ஏற்றும்போது அதற்குரிய குணம்தான் இருக்கும். எந்த உடம்புக்கு சத்து ஏற்ற வேண்டுமென்றால், கருமமல போதம் யாவும்  போதம் என்றால் ஞானம். கருமம் என்றால் உடம்பாகிய அறிவு. அப்ப பாச ஞானம் என்று சொல்வான் இந்த உடம்பை;  பசு ஞானம் அல்ல. பாச ஞானம். உடம்பு என்று சொல்லப்பட்ட ஒரு சேர்க்கை. மும்மலச் சேர்க்கை. அசுத்த சேர்க்கை. அசுத்த சேர்க்கைக்குப் பாச ஞானம் என்று சொல்வது. இப்ப இப்படி நாம் செய்வதெல்லாம் பாச ஞானம். பசு ஞானம் அல்ல. பசு என்றால் உயிர். பாசம் என்றால் உடம்பு. ஆக, பாச ஞானம் உள்ளவர்கள். கரும்மல போதம் யாவும் விடுத்தொழித்து  என்று சொன்னார். ஆக அவர் என்ன சொன்னார், சிறை உடல் நீ அறக்காட்டி.

                        சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி  என்றார். அப்ப சிறைப்பட்ட ஆன்மா, உடம்பில் சிறைப்பட்ட ஆன்மா அந்த ஆன்மாவை நீக்க வேண்டும் என்றார். சரி, சாப்பிடாமல் இருக்க முடியுமா? முடியாது.

                அப்ப,  கருமமல போதம் யாவும் –கருமமல போதம் என்பது உடம்பு, பாச ஞானம். பாசம் என்பது உடம்பு. உடம்பைப் பற்றி அறிவு. உடம்பைப் பற்றி அறிவு நமக்கு இல்லை. உடம்பைப் பற்றி அறிவு வந்தால் நிச்சயமாக உள்ளே ஒரு சுடர் தெரியும். அதை அறிந்து கொள்வதென்பது சின்ன விசயமல்ல.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 542
Total Visit : 208450

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version