வருகிறான் முருகப்பெருமான்

(உலக மாற்றத்திற்கு முருகப்பெருமானின் வருகை அறிவிப்பு)


01.07.2015 அன்று மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை

ஓம் அகத்திசாய நம

அன்பர்களே உங்கள் எல்லோருக்கும் வணக்கம்.

     நமது தொண்டர்கள் நீடு வாழ வேண்டும் என்று ஆசானிடம் முதலில் வேண்டிக் கொள்வோம். நமது தொண்டர்கள் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் இருக்கிறார்கள். அவர்கள் நீடு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம் அதுமட்டுமல்ல அவர்கள் திருவடியை வணங்குகிறோம்.

     கடந்த ஓராண்டு காலமாக உணவு இல்லாமல் இருக்கின்றோம். சாப்பாடு ஓரளவிற்குதான் சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டு வாழலாம். ஆனால் பேச முடியாது. ஆக இப்பொழுது அப்படி ஒரு பலகீனம் இருக்கிறது. இதுதான் தவத்தின் இயல்பு. ஆக நாற்பது ஆண்டுகள் உப்பில்லாமல் உணவு உண்டோம். ஆனால் இந்த ஒரு வருடமாக உணவு கிடையாது.

     ஓரளவிற்கு சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வாழலாம். ஆனால் பேசவும் முடியாது, செயல்படவும் முடியாது. இந்த சங்கம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆக தொண்டர்கள் திருவடியை வணங்குகிறேன்.

     என்ன ஐயா, இப்படி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. ஆமாம் தொண்டர்கள் திருவடியை வணங்குகிறேன். பொருள் உதவி செய்கின்ற உள்நாட்டு அன்பர்கள், வெளிநாட்டு அன்பர்கள் திருவடியை வணங்குகின்றேன்.

     ஆகவே இந்த சங்கம் பணிவுள்ள சங்கம், உயர்ந்த சங்கம். நான் வணங்குகின்ற ஆசான் முருகப்பெருமான், மிகப் பெரிய கருணையே வடிவானவன்.

     ஆசான் முருகப்பெருமான்தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே என்ன ஐயா, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பா, ஆமாம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே, ஏன் மனிதன் சாக வேண்டும் என்று தெரிந்து, அறிந்து, மரணத்தை தடுத்துக் கொண்டார்.

     என்ன ஐயா, ஆச்சரியம் இது பல கோடி ஆண்டுகளுக்கு முன்னே, ஒரு உயர்ந்த மனிதன், உயர்ந்த ஞானி முதன் முதலில் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர்தான் ஆசான் முருகப்பெருமான். அவர்தான் அறிந்தார்.

     மனிதன் ஏன் சாக வேண்டும்? சாகாமல் இருப்பதற்கு என்ன வழி? என்று நினைத்தார். அவரை அறியாமலே உயிர்களுக்கு அன்பு செய்தார். அதனால் உயிர்கள் மகிழ்ச்சி அடைய, அடைய அந்த ஆற்றல் ஆசான் முருகப்பெருமானுக்கு அறிவாக மாறியது. இதை ஆசான் வள்ளுவப்பெருமான்,

     பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

      தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

                                                                – திருக்குறள் – கொல்லாமை – குறள் எண் 322

                என்று சொல்லுவார். உயிர்களுக்கு செய்யக்கூடிய நன்மை, அது எந்த ஜீவராசியாக இருந்தாலும் சரி, எல்லா உயிர்க்களும் மகிழ்ச்சி அடைய, அடைய அந்த ஆற்றல் அறிவாக மாறும். அந்த அறிவுதான் ஏன் சாக வேண்டும்? அதை எப்படி தடுக்கலாம்? என்ற சிந்தையை உண்டுபண்ணியது. அப்படி தடுக்க வேண்டும் என்ற அந்த அறிவு, அந்த ஆற்றல் எப்படி வந்தது? ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள உயிர்கள் எல்லாம் ஆசான் முருகப்பெருமானை வாழ்த்தியது.

         

     ஆசான் முருகப்பெருமான் குளிக்கும்போது கூட ஒரு மரத்திற்கு அடியில்தான் குளிப்பார். அபப்டி ஒரு மரத்திற்கு அடியில் குளிக்கும் பொழுது அந்த மரம், அந்த நீரை பயன்படுத்திக் கொள்கிறது. ஆக இப்படி ஒரு உதவி செய்தார்.

    

     ஓரறிவிலிருந்து ஆறறிவு உள்ள எல்லா ஜீவராசிகளும் மகிழ்ச்சி அடைகின்றது. இப்படி ஒரு ஜென்மம் அல்லா, பல ஜென்மங்களில் பாடுபட்டு, பாடுபட்டு, பாடுபட்டு இயற்பிலேயே வந்தார். அவர்தான் அறிந்தார். ஜீவராசிகள் மகிழ்ச்சி அடைவதே தவம், இதுதான் அறிவு.

    

     என்ன ஐயா இப்படிப்பட்ட ஒரு அறிவு. ஜீவராசிகள் மகிழ்ச்சி அடைவதே அறிவு, அதுவே தவம் என்றார். உயிர்க் கொலை செய்து சாப்பிடாதே என்று ஆசான் முருகப்பெருமான்தான் சொன்னார். உயிர்க் கொலை செய்து சாப்பிடாதே, சைவ உணவு சாப்பிடு என்றார்.

     ஆக உயிர்கள்பால் தயவு காட்ட, காட்ட ஒருவன் தெளிவகிறான். பிறகு என்ன செய்ய வேண்டும்? ஆசான்  முருகப்பெருமானை அழைத்து முருகா, சற்குருநாதா நீங்கள் பெற்ற பேரின்பத்தை அடியேனும் பெற வேண்டுமப்பா, அதற்கு நீங்கள் அருள் செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டும். இப்படித்தான் எல்லா ஞானிகளும் கேட்டார்கள்.

     நீங்கள் எல்லோரும் முருகா என்று சொல்லுங்கள். முருகா, சற்குருநாதா! சாந்த சொரூபா! என் தந்தையே! எனது தாயே! தயவுடைய தெய்வமே! தயாபரனே! தேவாதிதேவா! நீ பெற்ற பேரின்பத்தை அடியேன் பெற அருள் செய் தாயே! அதற்குரிய அறிவும், பரிபக்குவம் எனக்கு தந்தருள வேண்டுமப்பா என்று ஆசான் முருகப்பெருமானிடம் கேட்க வேண்டும்.

     இந்த உலகத்தில் உள்ள ஞானிகள் என்று அழைக்கப்படும் அத்தனை பேரும் ஆசான் முருகப்பெருமானின் ஆசியை பெற்றிருக்க வேண்டும். ஆசான் அகத்தீசர் முதல் மகான் புஜண்டமகரிஷி, மகான் இராமலிங்கசுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், மகான் அருணகிரிநாதர், மகான் நக்கீரபெருமான், மகான் கச்சியப்பவள்ளல், மகான் பட்டினத்தார், மகான் திருமூலதேவர் போன்ற ஞானிகள் அத்தனை பேரும் ஆசான் முருகப்பெருமானின் ஆசியை பெற்றவர்கள்.

     இவர்கள் எல்லோரும் என் பிள்ளைகள்தான் என்பார் முருகப்பெருமான். அவனும் நானும் ஒன்றுதான் ஐயா. அவர் வேறு, நான் வேறு அல்ல. ஒருவன் எப்பொழுது என் திருவடியைப் பற்றுகின்றானோ அன்றே அவன் என் பிள்ளைதான் என்பார் ஆசான் முருகப்பெருமான்.

    

     கேட்க வேண்டும் ஆசான் முருகப்பெருமானிடம். எனக்கு வேறு ஒன்றும் வேண்டாமப்பா. நான் குடும்பஸ்தன் ஐயா, என்னை ஏற்று காப்பாற்று தாயே என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும் முருகப்பெருமானிடம் கேட்க வேண்டும். கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும், தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

     முருகப்பெருமானின் ஆற்றல் எப்படி இருக்கும்? எவன் நம்பினானோ அவனை கைவிட மாட்டான்.

     சன்மார்க்க மதத்திற்கு அப்பாற்பட்டது. சத்மார்க்கம் என்பார்கள். சத்மார்க்கம் என்பதே சன்மார்க்கம். அந்த “சத்” என்ற சொல்லில் மிகப் பெரிய இரகசியம் உள்ளது. சத் என்பதே சத்து. இந்த உடம்பில் சத்து, அசத்து இருக்கும். ஆகவே அசத்து நீங்கினால் சத்து நிலைக்கும்.

     சத்து என்ன செய்யும்? எப்போதும் நிலைத்து நிற்கும். ஆசான் முருகப்பெருமான் எப்போதும் இருப்பார். பல கோடி யுகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அது போலவே எல்லா ஞானிகளும் இருக்கிறார்கள். ஆக ஒரு மனிதனுக்கு முருகப்பெருமான்தான் வாசி நடத்திக் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு ஞானசித்தர் காலம். ஞானசித்தர் காலம் வந்து விட்டது ஞானசித்தர் காலம் நடந்து கொண்டிருக்கிறது.

     இப்பொழுது உங்கள் முன்னே முருகப்பெருமான் பேசிக் கொண்டிருக்கிறார், நான் பேசவில்லை. முருகப்பெருமான் பேசிக் கொண்டிருக்கிறார். இதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். என்ன ஐயா முருகப்பெருமான் பேசுகின்றானா என்றால், ஆமாம் உண்மைதான் ஐயா. இது மிகப் பெரிய உண்மைதான் ஐயா.

     ஐயா நான் நாயினும் கடைகெட்ட பாவி, நீ உயர்ந்த மனிதன்,இல்லை உயர்ந்த மகான்,கடவுள், நான் பாவிதான் தாயே, நீயோ புண்ணியவான் என்று முருகனிடம் சொன்னால், அப்பொழுதே அவன் உயர்ந்தவன்தான். அப்பொழுதுதான் நானும் அவனும் ஒன்று.

    

     ஆக முருகப்பெருமான் வேறு, நான் வேறு என்று நினைக்காதீர்கள். வாசி எனும் மூச்சுக் காற்றை ஆசான் முருகப்பெருமான் நடத்திக் கொடுப்பார்.

     ஆசான் முருகப்பெருமான் யாருக்கு வாசி நடத்திக் கொடுப்பார். இவன் பொருளாதாரத்தைக் கண்டு மயங்குவானா? இல்லை பெண்ணைக் கண்டு மயங்குவானா? அல்லது யான் என்ற கர்வம் கொள்வானா? என்றெல்லாம் பார்த்துதான், அந்த குணக்கேடுகள் அற்றவனுக்குத்தான் வாசி நடத்திக் கொடுப்பார். மேலும் இவன் என்ன செய்வான் என்பதும் முருகப்பெருமானுக்கு தெரியும்.

     இவனால் நாட்டிற்கு பாதுகாப்பு இருக்கும். இவனால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றால் மட்டுமே வாசி நடத்திக் கொடுப்பார். வாசி நடத்திக் கொடுப்பது மட்டும் அல்லாமல் முருகப்பெருமானே இவனுள்ளே தங்கியிருந்து காமதேகத்தை நீக்குவார். இது மிகப் பெரிய இரகசியம்.

     ஆனால் சிறிய சூட்சுமம். முருகப்பெருமானை நம்பினால் அந்த வாய்ப்பை தருவார். உடம்பினுள்ளே சார்ந்து இந்த உடம்பில் உள்ள அசத்தை நீக்கிக் கொண்டே வருவார். அசத்து நீங்கிய இந்த உடம்பு சத்! எனப்படும். அது அப்படியே அசையாத ஒன்றாக இருக்கும். அது தங்கமாகும்.

     ஆக சாதாரணமான உடம்பு தங்கமாகும். தக, தக, தக என்று இருக்கும். அப்பேர்ப்பட்ட ஆற்றல் பொருந்திய ஒரு வாய்ப்பு நமக்கும் இருக்கிறது, எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் சந்தேகம் என்ற நோய் அப்படி இருக்குமா, இப்படி இருக்குமா என்று வதைக்கும். நீங்கள் என்னை நம்பலாம். அதற்கு நானே சாட்சி.

     நீங்கள் நம்புங்கள் என்னை. இன்னும் ஆறு மாதம் வந்தால் என்பது வயது முடியப் போகிறது. ஒரு வருடமாக பட்டினியாக இருந்து இந்த என்பது வயதில் பேசிக் கொண்டிருக்கிறோம். வாழ்வதற்கு ஓரளவு உணவு சாப்பிடுகிறோம்.                                                                                                               

 

  ஆக இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு நானே சாட்சி. இப்பொழுது நான் சுத்த சைவன். அதுவும் வீர சைவமாக இருக்கின்றோம். உப்பில்லாமல் உணவை சாப்பிடுவோம். ஆக இப்படிப்பட்ட வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும்? ,முருகப்பெருமான் ஆசியால்தான் கிடைக்கும்.

     முருகப்பெருமான் வாசி நடத்திக் கொடுத்தால் எதையும்கண்டு மயங்க மாட்டான். வைராக்கியம் வரும், பொருளாதாரத்தை கண்டு மயங்க மாட்டான், புகழுக்கு மயங்க மாட்டான், பொருளுக்கு மயங்க மாட்டான். அவன்தான் உயர்ந்த மனிதன். அவன் உள்ளிருந்தே முருகப்பெருமான் பேசுவார். முருகப்பெருமான்தான் நமக்கு வாசி நடத்திக் கொடுக்க வேண்டும்.

     ஆகவே அன்பர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சங்கம்தான் உலகத்தை ஆளப் போகிறது என்று தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறோம். ஆசான் முருகப்பெருமான்தான் தலைமை தாங்கி நடத்தப் போகிறான். அவன் தாயினும் மிக்க தயவுள்ளவன். ஒரு நொடியில் வருவான்.

    

     என்ன ஐயா, ஒரு நொடியில் வருவானா? ஆம் ஒரு நொடியில் வருவா. நமது ஆசான் என்றும் இருப்பவன். இன்றும் இருப்பான், என்றும் இருப்பான், நாமும் இருக்கலாம். அந்த வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு சைவத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

     இந்த சங்கம் உலகத்தை ஆளப் போகிறது. மன்மத ஆண்டு முடிவதற்கு இன்னும் பத்து மாதம் இருக்கிறது. பத்து மாதத்திற்கு பிறகு ஆசானே வருகிறார். நாளைக்கே வரலாம், நாளைக்கே வரலாம். அப்படி வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

     தற்காலத்தில் மக்கள் வெளியே தெரியாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது எங்களுக்கு தெரியும். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடுபவர்கள் நூற்றுக்கு பத்து பேர், இரண்டு வேளை சாப்பிடுபவர்களும் நூற்றுக்கு பத்து பேர்தான் இருக்கிறார்கள்.

     ஆக வறுமை வாட்டி வதைக்கின்றது, வறுமை மக்களை வாட்டி வதைக்கின்றது. பல்வேறு வரிகளை போட்டு அப்படியே பிழிந்து எடுத்துவிட்டான். ஆனால் ஒரே ஒரு வரி மட்டும் இல்லை. நடந்தால் வரியில்லை என்றான். உட்கார்ந்தால் வரி, வருங்காலத்தில் வரப் போகிறது. மனிதர்கள் ஆட்சி செய்தால் உட்கார்ந்தால் வரி, நின்றால் வரி, நடந்தால் வரி, எச்சில் துப்பினால் வரி என்பார்கள். எனவே மனிதர் ஆட்சி ஒழிய வேண்டும். ஞானிகள் ஆட்சி வர வேண்டும்.

     மனிதர் ஆட்சி ஒழிய, மனிதர் ஆட்சி ஒழிய வேண்டும், மனிதர் ஆட்சி ஒழிய, மனிதர் ஆட்சி ஒழிய வேண்டும். இது சாபம். ஆனால் பண்புள்ள மக்கள் இருக்கிறார்கள் இல்லையா, அவர்கள் வாழ்வார்கள்.

     கயவர்கள் அழிவார்கள், பண்புள்ள மக்கள் வாழ்வார்கள். ஆட்சியில் பண்புள்ள மக்கள் இருக்கிறார்கள். யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் அவர்களால் செயல்பட முடியவில்லை.

ஆக பண்புள்ள மக்கள் ஆளப் போகிறார்கள். அதுவும் இந்த ஆண்டிலே ஆளப் போகிறார்கள். அதற்கு இன்னும் பத்து மாதம்தான் இருக்கிறது.

     ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்தான் உலகத்தை ஆளும். என்ன ஐயா, அதற்கு அவ்வளவு வல்லமை? உண்மைதானப்பா. ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்தான் உலகத்தை ஆளும். நமது தமிழர்கள்தான், நமது அன்பர்கள்தான் ஆட்சி நடத்துவார்கள். அவர்கள் பொருளை விரும்ப மாட்டார்கள், பொருள் பற்றற்று இருப்பார்கள், நாட்டிற்கு தன்னை அர்ப்பணிக்க கூடியவர்களாக இருப்பார்கள், உயர்ந்த பண்பான மக்கள் நம்முடைய மக்கள்.

     ஆக, ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் உலகத்தை காப்பாற்றும். ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் உலகத்தை ஆளும்.

     ஆட்சியில் பண்புள்ள மக்கள் இருக்கிறார்கள், அதை யாரும் மறுக்க முடியாது. அதில் கயவர்கள் இருக்கிறார்கள். அவன் பொருளாதாரத்தை சாப்பிடுகிறான். அது நாட்டின் சொத்து.

     அரசாங்க சொத்து அத்தனையும் சிவன் சொத்து. அரசாங்க சொத்து அத்தனையும் நாம் கொடுத்த வரி. அப்படிப்பட்ட சிவன் சொத்தை நீ மறைமுகமாக திருடுகிறாய், திருடிக் கொண்டு வருகிறாய். நீ கோடிக்கணக்காகவும், பல்லாயிரக்கணக்கான கோடி சேர்த்துக் கொண்டு வருகிறாய். நீ தண்டிக்கப்படுவாய், தண்டிக்கப்படுவாய், உன்னை தண்டிப்போம் என்று ஆசான் முருகப்பெருமான் சொல்லுகிறார். இதை நான் சொல்லவில்லை.

     கருப்பையில் இருக்கும் குழந்தைகளைப் பற்றியும், இந்த உலகத்தில் யார், யார் என்னென்ன செய்கிறார்கள் என்றும் ஆசான் முருகப்பெருமானுக்கு தெரியும்.

     ஆசான் முருகப்பெருமான் ஆசி பெற்று கொள்ளுங்கள். ஆசான் முருகப்பெருமானால் தண்டிக்கப்படக் கூடாது என்று உங்களுக்கு சொல்லுகிறோம். ஆகவே, இந்த சங்கம் உலக நன்மைக்கு வந்த சங்கம். இந்த சங்கத்தில் உள்ளவர்கள் ஆசான் முருகப்பெருமானின் தொண்டர்கள்.

     இந்த சங்கம் ஆட்சிக்கு வந்தால் உலகம் நிம்மதியாக இருக்கும். பருவமழை பெய்யும், இன்னொரு இரகசியம் உங்களுக்கு சொல்லுகிறேன்.

     அமெரிக்காவில் ஒரு இடத்தில் தீப்பிடித்தால் இங்கே இருந்து தீயை அணைப்போம். அமெரிக்காவில் தீப்பிடித்தால் ஒரு துணியை கையில் கசக்குவது போல அங்குள்ள தீயை அனைத்துவிடுவோம்.

     ஆக தீ நின்று போய்விடும். என்னப்பா இது, இவ்வளவு வல்லமையா என்று கேட்டார்கள். என் உள்ளே தலைவன் இருக்கின்றான் அல்லவா . அதனால் அவ்வளவு வல்லமை எங்களுக்கு இருக்கிறது.

     ஆக அமெரிக்காவில், இரஷ்யாவில் வேறு எந்த நாட்டில் தீப்பிடித்தாலும் அதை இங்கிருந்தே அணைத்துவிடலாம்.

     அன்பர்களே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள், ஒரு இடத்தில் பூமி நடுக்கம் வந்தால் அதை இங்கே இருந்து அப்படியே நிறுத்தலாம். பூமி நடுக்கம், பூகம்பம், கடல் சீற்றம், வேறு இயற்கை சீற்றங்கள் போன்றவைகளை நாங்கள் நினைத்தால் இங்கிருந்தே சரிப்படுத்த முடியும்.

     அவ்வளவு வல்லமை உங்களுக்கு உள்ளதா? ஆமாம், எங்களுக்கு நாட்டுப் பற்று இருக்கின்றதல்லவா, எல்லா உயிர்களும் நீடு வாழவேண்டுமென்று நினைக்கின்றோம் அல்லவா. இந்த எண்ண அலைகள், ஆற்றல் எல்லா சக்தியையும் உண்டாக்கும்.

     எல்லா உயிரும் இன்புற்று வாழ வேண்டும், எல்லா உயிரும் இன்புற்று வாழ வேண்டும், எல்லா உயிரும் இன்புற்று வாழ வேண்டும், கனவிலும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யக் கூடாது. எல்லா உயிரும் இன்புற்று வாழ வேண்டும், எல்லா உயிரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற எண்ண அலைகளின் சக்தியால் நில நடுக்கத்தையும், கடல் சீற்றத்தையும் தடுத்து மக்களை காப்பாற்றலாம். அப்படிப்பட்ட வல்லமை முருகப்பெருமான்தான் கொடுக்க முடியும்.

     இப்படி முருகப்பெருமாந்தான் எல்லாவற்றையும் செய்ய போகிறார். அப்படிப்பட்ட காலம் வெகு தொலைவில் இல்லை. இன்னும் பத்து மாதம்தான் இருக்கிறது. முருகப்பெருமான் வந்து உலகத்தை காப்பாற்றப் போகிறார். ஆகவே நீங்கள் என்னை நம்புங்கள்.

     அரசியல் அராஜகம், ஆன்மிகம் அராஜகம், மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் அராஜகம் இவைகள் எல்லாம் கட்டுப்படுத்தப்படும். அழிக்க வாய்ப்பில்லை, கட்டுபடுத்துவோம். இன்று ஜூலை 1 ஆம் தேதி உங்களுக்கு சொல்கிறோம்.

     அராஜக அரசியல்வாதிகளே, நீதிக்கு கட்டுப்படாவிட்டால் அரசியல் அராஜகவாதிகளே நீதிக்கு பணிந்தால் காப்பாற்றுவோம், பணிந்தால் கட்டுப்படுத்துவோம். மிகப் பெரிய வார்த்தைதான். எதையும்  செய்வோம் நாங்கள். எதையும் செய்வோம், எதையும் செய்வோம் என்று சொல்வதற்கு என்ன காரணம்? உள்ளே தலைவன் முருகப்பெருமான் தங்கியிருக்கிறான். தாய்மை குணம் உள்ளவன், உயர்ந்த பண்பாளன், கருணையே வடிவானவன், ஆசான் முருகப்பெருமான் எதையும் செய்வார்.

     ஆசான் அகத்தீசர், ஆசான் நந்தீசர், ஆசான் புஜண்டமகரிஷி, ஆசான் இராமலிங்கசுவாமிகள், ஆசான் மாணிக்கவாசகர், ஆசான் அருணகிரிநாதர், ஆசான் நக்கீரப்பெருமான், ஆசான் கச்சியப்பவள்ளல், ஆசான் பட்டினத்தார், ஆசான் திருமூலதேவர் போன்ற ஞானிகள் எல்லாம் இங்கே குடிலில் இருக்கிறார்கள். அவர்கள்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

     இப்பொழுது முருகப்பெருமான்தான் பேசிக் கொடிருக்கிறார். ஆகவே பண்புள்ள அரசியவாதிகள் காப்பாற்றப்படுவார்கள். மீண்டும் சொல்லுகிறேன், உலகத்தில் பண்புள்ள மக்கள், அரசியல்வாதியாக இருக்கிறார்கள், அவர்கள் காப்பாற்றப்படுவார்கள். அரசியல் பெயரால் கொள்ளையடித்தால், அரசியலை வைத்து கொள்ளை அடிப்பவனின் பல் உடைக்கப்படும். மீறினால் அழிக்கப்படும். என்ன ஐயா, இப்படிப்பட்ட பெரிய வார்த்தைகளை பேசிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறீர்களா, நானா பேசுகிறேன்? முருகப்பெருமான் பேசுகிறான். பேசடா தம்பி என்று சொன்னதால் பேசுகிறேன்.

     இன்று காலையிலே ஆசான் முருகப்பெருமானிடம் என் சிந்தையாக, செயலாக, சொல்லாக வந்து என்னை வழி நடத்திக் கொடு என்று கேட்டேன். ஆக முருகப்பெருமான்தான் பேசிக் கொண்டிருக்கிறான்.

     ஆக என் சிந்தை, செயல், சொல்லுமாக இருக்க வேண்டுமென்றும், கனவிலும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யக் கூடாது என்றும் நாங்கள் நினைப்போம். அப்படிப்பட்டவன் ஏன் இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுகிறார்? என்றான். அவ்வளவு கொடுமை நடக்கிறது. அரசியலா நடத்துகிறான். அதைத்தான் முன்னமே சொன்னேன். எச்சில் துப்பினால் வரி போடுவேன் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டது ஐயா.

ஆக இந்த அளவிற்கு தேவையில்லாத செலவுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை பிறகு பார்க்கலாம்.

     நாங்கள் ஆன்மீகவாதிதான். ஆன்மீகவாதிக்கு அரசியல் அவசியமா? என்றான். ஏன் அரசியலைப் பற்றி பேசுகிறீர்கள்? என்றான். அராஜகம் நடந்தால் முருகப்பெருமான் வந்துவிடுவார்.

     இப்பொழுது அரசியல் அராஜகம், ஆன்மீக அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது. எல்லா அராஜகத்தையும் கட்டுப்படுத்தி உலகத்தை காப்பாற்றும் கடமை ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்திற்கு உண்டு. நமது சங்க அன்பர்களுக்கும் உண்டு. இப்படி பேசியதற்கு என்னை என்ன செய்ய முடியும்? சுட்டுப்பார் என்னை.

பண்புள்ள அரசியல்வாதிகளுக்கு ஆசான் அகத்தீசரும், ஆசான் முருகப்பெருமானும் தாய் போன்று இருப்பார்கள். ஆனால், அரசியலை வைத்துக் கொண்டு பொருளை சம்பாதித்தால், பொருளை திருடினால் பதுக்கினால் உங்களால் வாழ முடியாது. நிச்சயம் உங்களால் வாழ முடியாது. இப்படி மிகப் பெரிய வார்த்தையை பேசுகிறோம். அராஜக அரசியல்வாதிகளே உங்களை கட்டுப்படுத்துவோம். எதிர்த்தால் அழித்தே விடுவோம்.

     ஆக அவன் வந்து நெறிப்பட்டு வாழ்வே என்றால் காப்பாற்றப்படுவான். ஆனால் மீறினால் உங்களை அழித்துவிடுவோம். ஆசான் முருகப்பெருமான் வந்து பேசிக் கொண்டிருக்கிறார். எங்களை ஒன்று செய்ய முடியாது. நாங்கள் காசை விரும்ப மாட்டோம்.

     உலக மக்களே இப்பொழுது முருகப்பெருமான் பேசிக் கொண்டிருக்கிறார். முருகன்தான் பேசிக் கொண்டிருக்கிறார். காலையில் எழும் போதே முருகப்பெருமானிடம் என் சிந்தையும், செயலுமாக இருக்க வேண்டும் என்போம்.

     ஆகவே ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஆட்சிக்கு வந்தால் பருவமழை பெய்யும், இயற்கை சீற்றம் இருக்காது. எல்லோரும் நிம்மதியாய் வாழலாம், எல்லா மக்களும் நிம்மதியாய் இருக்கலாம், பண்பு உள்ளோர்கள், சான்றோர்கள், தாய்மார்கள், பஞ்சபராரிகள் நிம்மதியாக இருக்கலாம். ஆனால் ஆன்மீக அராஜகவாதிகளுக்கும், அரசிய அராஜகவாதிகளுக்கும் சோதனை காலமாக இருக்கும்.

     ஆன்மீக அராஜகவாதிகள், அரசியல் அராஜகவாதிகள் திருத்திக் கொண்டால் மாறிக் கொள்ளலாம். அவர்கள் ஆசானிடம் வந்து ஐயா, நான் தவறு செய்து விட்டேன் ஐயா என்று சொன்னால் சரி மனிதன்தானே மாற்றி விடலாம் போ என்பார்கள்.

     ஆக நான் தவறு செய்துவிட்டேன் என்று சொல்பவன் காபாற்றப்படுவான். அப்படிதான் செய்வோம் என்று சொன்னால் ஒன்றும் பண்ண முடியாது. அப்படிப்பட்ட ஒரு பெரிய ஆற்றல் உள்ள உலகத் தலைவன் இருக்கிறான். இந்த சங்கம் வளர்ச்சி அடைய வேண்டும். வாழ வேண்டும், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க தொண்டர்கள் வாழ வேண்டும், உலக மக்கள் வாழ வேண்டும் என்று சொல்லி உலக மக்கள் எல்லோருடைய திருவடியையும் வணங்குகிறேன். ஒரு வருடமாக உணவு இல்லை. அதனால் பேச முடியவில்லை.

     மன்மத ஆண்டு முடிய இன்னும் பத்து மாதங்கள் இருக்கின்றன. வருகின்றேன், வெளியே வருகின்றேன். எனக்கு இந்த ஆண்டு வெளியே வர வாய்ப்பிருக்கிறது. அதற்கு நீங்கள் எல்லோரும் பூஜையில் கேட்க வேண்டும்.

     நாளைக்கே வெளியே வரலாம். முருகப்பெருமான் போ என்று சொன்னால் வந்துவிடுவேன். ஆனால் முருகப்பெருமான்தான் என்னை உள்ளேயே இருக்க சொல்லியிருக்கிறார்.

     என்னை நம்புங்கள், முருகப்பெருமானின் ஆசி பெற்றவன் நான். நான் உலக மக்களுக்கு தாய் போன்றவன், நீங்கள் அத்தனை பேரும் எனக்கு தாய், அத்தனை பேரும் எனக்கு தந்தை, உங்களை எனது சகோதரனாக நினைக்கின்றேன். ஆகவே நீங்கள் எல்லாம் நீடு வாழ வேண்டும்.

     நீங்கள் எல்லோரும் ஓம் அகத்திசாய நம, ஓம் அகத்திசாய நம, ஓம் அகத்திசாய நம, ஓம் அகத்திசாய நம, முருகா, சற்குருநாதா, சாந்தசொரூபா, என் தந்தையே, எனது தாயே, தயவுடைய தெய்வமே, தயாபரனே, தேவாதிதேவா உன் ஆட்சிக்கு தொண்டு செய்ய அருள் செய் தாயே, உன் ஆட்சிக்கு தொண்டு செய்ய அறிவும், பரிபக்குவமும் தந்தருள வேண்டும் தாயே, எனது சிந்தை, செயல், சொல்லுமாய் இருந்து வழி நடத்து தாயே, எந்த வகையிலும் நான் பாவியாகாமல் இருக்க அருள் செய் தாயே, நீயே என்னை காப்பாற்றி இரட்சிக்க வேண்டும் தாயே, உன் ஆசி பெற அருள் செய் தாயே என்று ஜூலை 1  ஆம் தேதி இன்று பேசியிருக்கிறோம்.

     இந்த ஆண்டு (2015 ஆம் ஆண்டு) முடிவதற்கு இன்னும் ஐந்து மாதம்தான் இருக்கிறது. ஆகவே அதற்குள் வெளியே வரலாம். நாளைக்கே வெளியே வரலாம். நான் வெளியே வரும் போது அது உலகிற்கு நன்மையாய் இருக்கும்.

     நான் என்று வெளியே வருகின்றேனோ அன்றே உலக நன்மை என்று வைத்துக் கொள்ளலாம். உங்கள் எல்லோருக்கும் ஆசி இருக்கிறது. ஆகவே நீங்கள் எல்லாம் நீடு வாழ வேண்டும் என்று சொல்லி முடிக்கிறேன். நன்றி வணக்கம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 223
Total Visit : 208957

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version