மகான் கௌசிகர் அருளிய ஒளி சூட்சும நூல் – சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A.,B.Ed.
13.08.2018, திங்கட்கிழமை அருட்பெருஞ் சக்தியே அரங்கா அண்ணலே சித்தியே தேசிகா அருட்சுடராக சரவண சோதி ஏற்றி ஆக்கம் தரும் ஞான குருநாதா நாதனே அரங்கமகா ராசனே ஞானயுகம் உன்னால் ஆகுமெனக் கூறி பூதலத்தில் ஒளி சூட்சும நூலை புகலுவேன் விளம்பி நள்ளி திங்கள் திங்களிலே எழுநான்கு திகதி சோம வாரம் (விளம்பி வருடம் ஆடி மாதம் 28ம் நாள் 13.08.2018, திங்கட்கிழமை) தேசிகனுக்கு கௌசிகர் யானும் ஓங்கார உலகம் அமைய உரைப்பேன் ஓங்கார ஞானியாக கலியுகத்தில் கலியுகத்தில் அவதாரம் எடுத்துள்ள கந்தவேலன் ஞான சூட்சுமமான அழியாமை தரும் ஞானதேசிகன் அரங்கனே உயர்குரு ஆகும் ஆகவே தலைமைதனை ஏற்று அகிலத்தார் வணங்கி வர மகானே என போற்றியே மாதருமத்தில் உதவி வருக வருகவே கலி இடர் விலகும் வறுமைகள் துன்பங்கள் விலகும் முருகா என வணங்கும் மக்களே முழுமைபட ஞானயுகம் வாழ வாழ தகுதி வளம் பெறுவர் வல்லமை அதிபலம் அடைவர் காலம் வெல்லும் சித்தியும் கண்டமிடர் வெல்லும் சக்தியும் சக்தியும் பெற்று சிறப்பர் சர்வபலம் சமத்துவ சமதர்ம பக்குவம் அதி யோகநிலையை பாமரரும் அறிந்து தெளிவர் தெளிவு தரும் அரங்கனே வாழ்க திடமருளும் தேசிகனே முக்தனே அழியாமை உன்னால் உலகோர் அடைவர் சிறப்பர் என்பேன்
என்கவே எல்லா மக்களையும் ஏகநிலைக்கு கொண்டு வர சண்முக நெறி கொண்ட வள்ளலே
சதுர்யுக யோகி துணை கொண்ட 11. கொண்டநல் ஐயனே முருகனே
குருராசனே யாவுமாக வர தொண்டென வந்த மக்களெல்லாம் திருவருள்பட சித்தி காண்பர் ஒளி சூட்சும நூல் முற்றே.
-சுபம்
முருகப்பெருமான் துணை மகான் கௌசிகர் அருளிய ஒளி சூட்சும நூலின் சாரம் :
எல்லையில்லா சக்தியுடைய அருட்பெரும் சக்தி வடிவமே அரங்கமகா தேசிகனே அண்ணலே அருள்சித்தியே ஞானதேசிகா அருள்ஜோதி சுடராக சரவண ஜோதிதனை ஏற்றி உலகமெலாம் ஆக்கம் பெறும் வகையில் வகை செய்திட்ட அருள் ஞான குருவே ஞானத்தலைவனே அரங்கமகா ராஜனே இந்த கலியுகம் மாறி ஞானயுகமாக உம்மால் மாறிடும் என உலகறியக் கூறியே உலக நலம் கருதியும் முருகப்பெருமானின் ஞான உலகம் அமைந்திட வேண்டியும் விளம்பி வருடம் ஆடி மாதம் 28ம் நாள் 13.08.2018, திங்கட்கிழமையான இன்றைய தினமதனிலே ஒளி சூட்சும நூல்தனையே கௌசிகர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் கௌசிகர்.
முருகப்பெருமானின் அவதாரமாக ஓங்கார ஞானியாக இந்த கலியுகத்தினில் அவதாரம் எடுத்துள்ள முருகப்பெருமானின் ஞான சூட்சுமமானவரும் அழிவிலாமையெனும் மரணமிலாப் பெருவாழ்வை தந்தருளும் ஞானதேசிகன் அரங்கமகா தேசிகனே இவ்வுலகின் உயர்ஞான குரு ஆவார்.
ஆதலினால் ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் தலைமைதனை ஏற்றுக் கொண்டு உலகோரெல்லாம் அரங்கன் திருவடி பற்றி வணங்கி வரவர, அரங்கனை மகானே மகா ஞானியே என்றே மனம் உருகி போற்றி வணங்குவதுடன் ஆறுமுக அரங்கன் செய்யும் அளவிடற்கரிய தானதருமங்களில் மகா தரும் செயல்களில் உதவிகள் செய்து வரவர, தர்மபலன் உலகினில் அதிகமாகி உலகைப் பற்றியுள்ள கலியுகத்தின் துன்பங்கள் எல்லாம் விலகிவிடும். நாட்டினைப் பற்றியுள்ள இல்லாமையாகிய வறுமைத் துன்பங்கள் விலகிடும். முருகா, முருகா, முருகா என மனம் உருகி வணங்கி முருகப்பெருமானின் ஆசியை பெறும் மக்களே ஞானயுகத்தினில் முழுமைபட பங்கு பெற்று வாழ்வதற்கு தகுதியை பெறுவார்கள். வல்லமைகள் பலவும் பெற்று அதிபலம்தனை அடைவார்கள். காலத்தை வெல்லும் சித்திகளையும், இடைக்கண்டங்களையும் வெல்லும் சக்தியும் பெற்று சிறப்படைவார்கள். சர்வபலமும் சமத்துவமும் சமதர்மமும் பெருகி பக்குவம் பெற்று அதியோக நிலைதனை கல்வியறிவு இல்லாத பாமர மக்களும் அறிந்து தெளிவடைவார்கள்.
பரிபக்குவமும் தெளிவும் தந்தருளும் ஆறுமுக அரங்கமகா தேசிகனே வாழ்க! வாழ்க!!
சர்வ மனோதிடங்களை அருளிக் காக்கும் ஞான தேசிகனே முக்தனே அரங்கா உம்மால் அழிவிலாமையெனும் மரணமிலாப் பெருவாழ்வை அடைவார்கள், அடைந்து சிறப்பார்கள் என உரைத்தேன் கௌசிகர் யானும்.
உலகின் அனைத்து மக்களையும் ஒரே நிலைக்கு ஒரு தாய் மக்களாக சகோதரத்துவமாய் கொண்டு வர், சண்முக நெறியாம் முருகப்பெருமானின் தூயநெறிகளை கொண்டு உலகை மாற்றம் செய்து வருகின்ற வள்ளலே வள்ளல் ஞானியே நான்கு யுகங்களிலும் தோன்றுகின்ற சதுர்யுக யோகி அகத்தியரின் துணையும் கொண்ட நல்ஐயனே, முருகப்பெருமானாக உள்ள முதுபெரும் அரங்கமகா தேசிகனே உம்மை பணிந்து உமது திருவடி பற்றி உம்மை பின்தொடர்ந்து வந்திடும் மக்களெல்லாம் திருவருள்பட உறுதியாக சித்தி காண்பார்கள் என கூறுகிறார் மகான் கௌசிகர்.
-சுபம்