மந்திர சித்தி பெறுவது எப்படி? | தவம் செய்வது எப்படி?
” ஓம் அகத்தீசாய நம”
” ஓம் அகத்தீசாய நம”
” ஓம் அகத்தீசாய நம”
” ஓம் அகத்தீசாய நம”
அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே வணக்கம்
எந்த அளவிற்கு நெருங்குகிறாயோ “சுகப்பிரம்ம தேவா” “அகத்தீஸ்வரா” “நந்தீசா”நீங்க எல்லாம் பெரியவங்க நான் பாவித்தான் இன்னும் தடுமாறிக்கொண்டிருக்கிறேன்
நீங்கள் சாந்தமே வடிவான மக்கள் எதை வேண்டுமென்றாலும் செய்வீர்கள்
எத்தனையோ பாவிகள் உன் திருவருள் கடாச்சத்தால் சித்தி பெற்றிருக்கிறான் நானும் பாவித்தான் எனக்கும் அருள் எனக்கும் அருள் செய்யவேண்டும்
உனக்கு பெரிய விஷயமல்ல –
போகிற போக்கில் உன் கடைக்கண் பார்வை பட்டாலே போதும்
– ஆமாம் நல்ல பிள்ளை நல்லபிள்ளை தான் – நியாயம் தான் எத்தனையோ பாவிகளப்பா உன் ஆசி பெற்றிருக்கிறான் – நானும் தான் பாவி எனக்கும் அருள் செய்யப்பா – நான் என்ன அவ்வளவு கொடிய பாவியா
உன்னிடம் ஆசி பெற்ற மக்கள் தலை நிமிர்ந்து வாழுகிறான்.
உன் ஆசி பெற்ற மக்கள் ஞானி ஆகி இருக்கிறான்
உன் ஆசி பெற்ற மக்கள் பாவத்தை எல்லாம் பொடியாக்கி விட்டான்
உன் ஆசி பெற்ற மக்கள் காமத்தை எல்லாம் பொடியாக்கி விட்டான்
உன் ஆசி பெற்ற மக்கள் குணக்கேட்டை எல்லாம் தூள் தூள்படுத்திவிட்டான்
உன் ஆசி பெற்ற மக்கள் நினைத்தை எல்லாம் செய்கிறான்
உன் ஆசி பெற்ற மக்கள் மரணமில்லா பெருவாழ்வு பெற்றிருக்கிறான்
ஏனோ என்பால் கருணை காட்டாது இருக்கிறாய்
எனக்கு அருள் செய்யவேண்டும் என்று கேட்பதற்கு வெண்துகில் தருகிறோம்
நான் கிட்டத்தட்ட பலலட்சம் வருடம் பூஜை செய்திருக்கிறேன்
அதென்னய்யா பல லட்சம் வருஷம்
இவ்வளவு ஞானிகளை வாங்கியிருக்கிறேன் அல்லவா
ஒரு மகான் சித்தி பெறுவதற்கு 27000 ஆண்டுகள் பூஜை செய்யவேண்டும் தவம் செய்திருக்கவேண்டும்
அவரை பூஜை செய்கிறோம் – பூஜை செய்தால் – தவம் செய்ததற்கு ஒப்பானது
அப்படி நான் பலலட்சம் ஆண்டுகளுக்கு பூஜை செய்திருக்கிறோம்
எத்தனை முறை நான் கை கூப்பியிருக்கிறேன் எனக்கே தெரியாது
எத்தனை முறை நான் நாவால் சொல்லியிருக்கிறேன் என்று எனக்கே தெரியாது
இப்படி எல்லாம் ஆசானை வணங்கிஇருக்கிறோம்
மந்திர சித்தி பெறுவது எப்படி தவம் செய்வது எப்படி |