மக்கள் இதற்கு முன்னே உபதேசம்னு சொல்லுவான். உபதேசம்னு சொன்னா தேசம் உபதேசம். இப்ப இந்த தேசத்தில் இருக்கிறோம். உபதேசம் என்பது மேல்நிலையானது அல்லது சொர்க்கம் சொர்க்கநிலையை அடைவது. அப்போ அந்த சொற்கள் இனி பிறவாமைக்குரிய மார்க்கமாய் இருக்கும். அதான் உபதேசம். சும்மா இரு என்ற சொல் அந்த உபதேசம் பெற்றுவிட்டால் அவர்களுக்கு மரணமில்லை. அதான் உபதேசம்.
சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்
றெம்மா லறிதற் கெளிதோ பராபரமே. 70.
சுட்டிக்காட்ட முடியாத ஒரு பூரணம் சும்மா இருப்பது.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.
என்றார் அருணகிரிநாதர்.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.
அதற்கு மேல் ஒரு சொல்லே கிடையாது. அது உயர்ந்த சொல். அதான் உபதேசம். அது யாருக்கு சொல்வார்கள். புண்ணியவான்களுக்குதான் சொல்லுவார்கள். மற்றவர்களுக்கு சொல்லமாட்டார்கள். அந்த மாதிரி ஒரு உபதேசம் பெற்றால் அது ரொம்ப
“நீலச் சிகிண்டையில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும்
கோலக் குறத்தியுடன் வருவான்குரு நாதன் சொன்ன
சீலத்தை மெல்லத் தெளிந்து அறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்று இருப்பார்மரிப் பார்வெறும் கர்மிகளே”
-கந்தர் அலங்காரம்
குருநாதர் சொன்ன சீலத்தை மெல்லத், சீலம் என்றால் சிறப்பு.
“குருநாதர் சொன்ன சீலத்தை மெல்லத் தெளிந்து அறி வார்சிவ யோகிகளே”. அதுதான் சும்மா இருக்கிற இரகசியம். அந்த இரகசியத்தை ஆசான் சொல்ல வேண்டும். இல்லையென்றால், தாயுமானசுவாமிகள் சொன்னது போல
சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்
றெம்மா லறிதற் கெளிதோ பராபரமே. 70.
-தாயுமானசுவாமிகள்.
அறியமுடியாது. தலைவன் பார்த்து செய்யணும். அது யார் செய்யணும். உலகத்துக்கே முதுபெரும் தலைவன் சுப்ரமணியர்தான் செஞ்சிதரனும். அவன்தான் வாசி நடத்திக் கொடுத்து நில், நிறுத்திக்கனு சொல்லுவான். நிறுத்து நில் அதுக்கு மேல போகாதே என்று சொல்லுவான். அதுவும் ஆசான் சுப்பிரமணியர்தான் செய்யணும். மற்றவர்கள் யாராலும் முடியாது. அவன் ஆசி பெறுவதற்கு சான்றோர்களை கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். அவன் எப்படி இருக்கான், அவனுடைய அருள் பெற வேண்டும். அவனுடைய ஆசி பெற வேண்டும். மனிதனுக்குதான் அந்த வாய்ப்பு. கேட்டு உண்மையை அறிந்து கொள்கின்ற வாய்ப்பு மனிதனுக்கு இருக்கு. மற்ற ஜீவராசிகள் கேட்கும், தெரியாது. அதற்கு ஐந்தறிவு உண்டு தெரியாது. பார்க்கும், பார்க்க கூடிய அறிவு நமக்கும் இருக்கு. கேட்கும், நமக்கும் கேட்க்கும் திறன் இருக்கு. அதுவும் சாப்பிடும், நாமும் சாப்பிடறோம். அதுவும் மூக்குல வாசனை அறியும். ஆனால், ஆறாவது அறிவு ஒவ்வொரு புலன்களையும் பற்றி அறிந்துகொள்கின்ற அறிவு ஆறாவது அறிவு. அந்த அறிவு மற்ற ஜீவராசிக்கு இல்லை. அப்போ ஆறாவது அறிவுள்ளவன் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும். அது எதன் வழியா தெரிஞ்சிக்கலாம். படித்தும் தெரிஞ்சிக்கலாம்; கேட்டும் தெரிஞ்சிக்கலாம். படித்து தெரிந்து கொள்வதை விட கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. படிப்பதற்கு பல நூல்கள் இருக்கு.
கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி பல;
-நாலடியார்
கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி பல;
கல்வி என்பது கணக்கிலடங்காது. என்னதான் படிக்க முடியும். படிச்சாலும் புரியுமா? அனுபவபட்டவங்க சொன்னால் நல்லது. அந்த அனுபவபட்டவன் சொல்லுவதை கேட்க வேண்டும். அதான் வள்ளுவன் என்ன சொன்னார்.
செவியால் அறிந்து கொள்ளவேண்டும். கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்.