உலக நன்மைக்காகவே ஆரம்பிக்கப்பட்டது! – சரவணஜோதி கட்சி உலகத்தை ஆளும் – இனி மக்கள் நிம்மதியாக வாழலாம்!!!!

ஓம் அகத்தியர் துணை.

சத்தியமே அகத்தியம்                                                   அகத்தியமே ஜெயம்.

 


அருமுகப்பெருமான் அருளுரை – 14.8.15

ஓம் அகத்தீசாய நம

அன்பர்களே வணக்கம்

நான் ஓராண்டுகாலமாக உலக நன்மைக்காகவே ஒருவேளை உணவு கஞ்சி அதான் சாப்பிட்டிருக்கிறேன். அதுவும் நிறுத்துனா நிறுத்தியிருக்கோம். 40 ஆண்டு காலம் உப்பில்லாமல் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த ஓராண்டு காலம் ஓரளவு கஞ்சி சாப்பிடலாம். வாழலாமே தவிர பேச முடியாது. அந்த அளவு நான் விரதம் இருந்திருக்கிறேன். எதற்காக விரதம் இருக்கின்றேன் என்றால் உலக நன்மைக்காகதான் இருக்கிறேன். அன்பர்களெல்லாம் கேட்டுகொண்டார்கள், வெளியே வரவேண்டுமென்று. ஆனால் முருகப்பெருமான் அனுமதி இல்லாமல் நான் வெளியே வரமுடியாது. அவர் சொன்னார், என்று நான் சொல்கிறேனோ அன்றுதான் வெளியே போக வேண்டுமென்று சொன்னார். அவர் சொல்ல வேண்டும். அவர் ஆசியால்தான் செயல்படுகின்றேன்.

அவர்தான் எனக்கு வாசி நடத்தி கொடுத்தார். ஆகவே, உங்கள் வேண்டுகோள்! முருகப்பெருமான் ஆசியால் நான் வருகின்ற வாய்ப்பை அவர்தான் எனக்கு உணர்த்த வேண்டும். ஆகவே, இன்று முதல், இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சி சரவண கட்சி உலக நன்மைக்காகவே ஆரம்பிக்கப்பட்டது! உலக நன்மைக்காகவே ஆரம்பிக்கப்பட்டது! உலக நன்மைக்காகவே ஆரம்பிக்கப்பட்டது! உலகநன்மையா? ஆம் உலக நன்மைதான். இன்று முதல் உலகநன்மைகாகவே இந்த கட்சி செயல்படும். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகம் பூராவும் இந்த கட்சி உலகத்தை ஆளும். உலகமே ஆளுகின்ற வல்லமையா? ஆம்! உலகத்தை ஆளுகின்ற வல்லமை உண்டா? உண்டுதான். உண்டே! உண்டு! உலகத்தை ஆளுகின்ற வல்லமை. ஆசான் முருகப்பெருமானும், ஆசான் இராமலிங்கசுவாமிகளும், ஆசான் அருணகிரிநாதரும், ஆசான் புஜண்டமகரிஷியும், ஆசான் திருமூலதேவரும், ஆசான் கச்சியப்பவள்ளலும், ஆசான் நக்கீரபெருமானும், நவகோடி சித்தரிஷிகள் ஆசியாலும் உலகத்தை ஆள்வோம். இந்த கட்சிதான் ஆளும்.

ஆகவே இனி மக்கள் நிம்மதியாக வாழலாம். இனிதான் உலகம்  சுபிட்சமாக வாழும். அராஜகவாதிகளே! அரசியல் அராஜகம், ஆன்மீக அராஜகம், மதத்தின் பெயரால் அராஜகம், ஜாதிகள் அராஜகம், கட்சிகள் அராஜகம் எல்லா அராஜகங்களும் கட்டுபடுத்தப்படும். இல்லை எதிர்த்தால் அவ்வளவுதான்  . ஆகாவே, இனிமேல் இதுதான் உலகம். இனிமேல் உலகம் செழிக்கும். இன்றுமுதல் உலகம் செழிக்கும்…… பருவமழை பெய்யும், நாடு சுபிட்சமாகும். தொடர்ந்து பருவ மழை பெய்யும்,நாடு செழிக்கும். ஆக அச்சமிலாத வாழ்வு. இன்று பேசுகிறோம். இனி உலகையே இந்த கட்சிதான் ஆளும். உலகமே சரவனஜோதிதான் ஆளும் என்பதை உறுதி கூறுகிறேன். ஆகவே, வருவேன் வெளியே…., வருவேன்! வருவேன்! வருவேன்!…. முருகன் ஆசியால்!….. ஆகவே இப்பொழு நான் பட்டினி கிடப்பது உலக நன்மைக்குதான். என்னையா காரணம்னா?  கட்டளையிருக்கு. ஓராண்டு பட்டினி இருக்கணும். நாளைகே சாப்பிட சொல்லலாம், இப்பகூட சாப்பிட சொல்லாலாம். இப்ப காலையில் இருந்து ஒன்னும் இல்ல . நேத்துல இருந்து கொஞ்சம் கஞ்சிதான் சாப்பிடிருக்கோம். சாப்பிடு மகனே என்று சொன்னால் சாப்பிடுவோம். நிறுத்துனா நிறுத்திடுவோம். ஆக, இன்று முதல் எதிர்பாருங்கள். இதான் உலகம், அற்புதம் நடக்கபோகுது. சொன்னது கடுகுதான். அற்புதம்! அற்புதம், அற்புதம்!!! அற்புதம் நடக்கபோகுது. ஆணை பெண்ணாக்குவோம், பெண்ணை ஆணாக்குவோம்; தூணை துரும்பாக்குவோம், துரும்பை தூணாக்குவோம். எதையும் செய்யலாம். என்னனா? அவ்வளவு பெரிய வல்லவன்  முருகப்பெருமான். நினைக்கும் போதே வந்துடுவான். அவ்வளவு பெரிய ஆசான் அகத்தியர் சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியிருக்கிறான். உருவாக்கி தொண்டர்களை உருவாக்கியிருக்கிறான், பண்புள்ள தொண்டர்கள் இருக்கிறார்கள் இங்கே. மாதவன் தலைவர், உதவி தலைவர் ராம்குமார், செயலாளர் ரங்கநாதன், பொருளாளர் வேல்முருகன், கைலாசம் எல்லாரும் பெரிய பெரிய மகான்கள் இருக்குறீங்க. நானும் அதிலே ஒரு கடுகு போன்றவன். ஆகவே, உலக மக்கள் எதிர்பார்கிறார்கள். எங்கு பார்த்தாலும் அராஜகம், எங்கு பார்த்தாலும் திருட்டு கட்டுபடுத்தமுடியவில்லை. அஞ்சேல்! அஞ்சேல்! அஞ்சேல்! என்று சொல்லுகின்ற  ஆற்றல் முருகப்பெருமான் இருக்கிறாரன். அவன்தான் வரபோறான். எங்கிருந்து வருவான்னா? வந்துட்டாயா, முன்னே வந்துட்டாயா, அவன்வந்து வெகுநாள் ஆய்டுச்சி. ஆகவே எதிர்பாருங்கள் மக்களே, பயபடாதீர்கள். ஐயோ! யாருமே இல்லையா விலைவாசி நாளுக்கு நாள் ஏறிட்டுபோகுதே, புளி புலியா மாறிடுச்சி. கரைக்கிற புளி காட்டு புலியா மாறிடுச்சி. ஒரு கிலோ 90ரூ. ஆக புளி புலியா மாறிவிட்டது. இதை மாற்றுவோம், விலைவாசியை குறைப்போம், வரியை குறைப்போம்,  மக்கள் அச்சத்தை தீர்ப்போம், உலக மக்களை காப்பாற்றுவோம். என்ன இவ்வளவு வல்லமைனா? வல்லமை உண்டு எங்களுக்கு. முருகப்பெருமான் ஆசியால் உண்டு. ஆசான் இராமலிங்கசுவாமிகள், ஆசான் மாணிக்கவாசகர், ஆசான் தாயுமானசுவாமிகள், ஆசான் புஜண்டமகரிஷி நவகோடி சித்தர்கள் ஆசிபெற்றவர்கள் நாங்கள். நமது சங்கம் நவகோடி சித்தரிஷிகள் ஆசிபெற்ற சங்கம். எதிர்பாருங்கள் மக்களே நம்புங்கள் எங்களை!!!!…செய்வோம், செய்வோம், செய்து முடிப்போம் உலகத்தை, உலகத்தை தூய்மை படுத்துவோம். அராஜகத்தை கட்டுபடுத்துவோம்!!! பண்புள்ள மக்களை காப்பாத்துவோம். வருகிறோம்! வருகிறோம்! வருவோம் வெற்றிபெறுவோம் என்று சொல்லி வெறும்பாட்டு என்று நினைக்காதிர்கள். ஒவ்வொரு சொற்களும் பதிவு செய்யபடும். பதிவு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் இப்போ. உலக மக்கள் எதிர்பார்க்கலாம். என்னடா உலகத்துல எங்க பார்த்தாலும் கொடுமை தாங்கமுடியவில்லையே வழியே இல்லையா. பத்தினி பெண்டிர்கள, பண்பாளர்கள், பக்தர்கள், சான்றோகலெல்லாம் தவிக்கிறார்கள். யாருமில்லையா! வந்துவிட்டோம், வந்துவிட்டோம், வந்துவிட்டான் முருகன்! வந்துவிட்டான் முருகன்! வந்தேன் நானே, வருகிறேன், வருவேன், வருவேன், வருவேன்….. உலகத்தை காப்பத்த என்னை அனுப்பி வைத்தார். பொருள்பற்று இல்லாதவன், ஜாதிவெறி இல்லாதவன், யான் என்ற கர்வம் இல்லாதவன், தாய்மை குணம் உள்ளவன். இந்த வாய்ப்பை எனக்கு முருகப்பெருமான் கொடுத்தார். மகனே என்று அழைத்தார் என்னை. என்ன தாயே என்று கேட்டேன் மகனே உலகமக்களுக்கு தொண்டு செய் என்றார். நான் வெளியே வரமுடியாது. நானோ கோடிகணக்கான சூரியபிரகாசம் உள்ளவன். நீ இருந்து தொண்டு செய் பிள்ளையே என்றார். தொண்டு செய்ய வந்திருக்கிறார். ஆகவே இன்று முதல் ஆடி மாதம் ஆடி அமாவாசை இன்று வெள்ளிகிழமை.  இன்று உறுதி தருகிறேன்.  நான் வெளியில் வந்தால் உலகமக்களுக்கு தாய் போல் இருப்பேன். இல்லை இல்லை தாய் தந்தை போன்று இருக்கிறேன். உங்கள் திருவடியை வணங்குகிறேன். ஆக இந்த சங்கம், இந்த கட்சி, இப்ப கட்சின்னு சொல்றோம். சரவனஜோதி கட்சி உலக மக்களுக்கு தாய் போல் இருந்து தொண்டு செய்யும். அழைத்தால் அக்கணமே வருவோம். அதுமட்டும் அல்ல. நாளைக்கு இவன் இந்த இடத்தில் இப்படி செய்வான். இருசக்கர வாகனத்தில் திருடுவான். என்னையா ஆச்சர்யம். இந்த நபர் இருசக்கர வாகனத்தில் திருடுவான். அவன் பேர், ஊர் எல்லாம் சொல்லிவிடுவோம். Four wheel நாலு சக்கர வாகனத்தில் திருடுவான். எங்கு திருட்டு நடந்தாலும் தெரியும் எங்களுக்கு. முருகப்பெருமான் சொல்லுவான், முன்னே எல்லாம் சொல்லிகிட்டே இருப்போம். முதல் நாள் சொல்லுவான் 13ம் தேதி காலையில் சொல்லுவான். நாளைக்கு இங்கு இந்த நிகழ்ச்சி நடக்கும். ஆஹா எவ்வளவு பெரிய வாய்ப்பு அது. 13ம் தேதி காலையில் சொல்லுவான், 14ம் காலையில் இந்த நபர் இந்த மாதிரி செய்யபோறான். அப்படியே புடிச்சிடுவான். ஆக, குற்றவாளிகள் தண்டிக்க படுவார்கள். குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். குற்றம் நடப்பதற்கு முன்னே சொல்லிவிடுவான் முருகப்பெருமான். அவ்வளவு பெரிய வாய்ப்பை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கோம். வாய்ப்பு இருக்கலாம். 3 மாசமோ, 2 மாசமோ, 4 மாசமோ இருக்கலாம், நாளைக்கே நடக்கலாம். ஆக அவன் வருவான் முருகப்பெருமான் வந்து உலகமக்களை காப்பாற்ற போறான். மிகப்பெரிய தலைவன். அவ்வளவு பெரிய தலைவன், ஆற்றல் பொருந்திய முருகப்பெருமான். வேற வழியே இல்லப்பா. மனிதர்கள் ஆட்சியால் செய்ய முடியாது. மனிதர்கள் ஆட்சியால் செய்ய முடியாதப்பா இதை. அவர்கள் மீது குற்றமில்லை.  அவர்களுக்கு அவ்வளவு தான் முடியும். எவ்வளவு பெரிய வல்லமை, கல்வியறிவு, ஆற்றல், திறமை இருதாலும் செயல்பட முடியாதப்பா. ஆக, அவன்தான் யாராலும் செய்யமுடியாது. அவர்கள் மீது குற்றமில்லை. மனிதர்கள் தானே அவர்கள் தெரியாதல்லவா. நாளைக்கு நடக்கப்போவது தெரியாது. ஆனால், இவர்கள் முக்காலம் உணர்ந்தவர்கள் ஞானிகள். வருங்காலம், நிகழ்காலம், இறந்தகாலம் அத்தனையும் தெரியும் அவர்களுக்கு. மூன்று காலம் தெரியும் அவர்களுக்கு. எல்லா காலமும் தெரியும்.  மிகப்பெரிய தலைவன், மிகப்பெரிய தலைவன். அப்பப்பா……. ஆற்றல் பொருந்திய ஆறுமுகன், ஆற்றல் பொருந்திய முருகப்பெருமான், ஞான பண்டிதன், ஞான கடல், கல்வி கடல், அருள் பொக்கிஷம், ஆற்றல் பொருந்திய முருகன் அவனா வருகிறான். அவ்வளவு பலகீனமா போச்சி உலகம். என்னையா இது. ஒரு சின்ன விஷயம் இது. ஒரு கடுகு விஷயத்துக்கு முருகப்பெருமான் இவ்வளவு பெரிய மகானா? உலகத்தை ஆட்டி படைக்கும் வல்லவன். ஆணை பெண்ணாக்குவான், பெண்ணை ஆணாக்குவான், உலகத்தை எதை வேண்டுமானாலும் செய்யகூடிய வல்லவன். அப்பேற்பட்ட தலைவன் இவ்வளவு சின்ன விஷயத்துக்கா? உலகம் என்பது ஒரு சின்ன விஷயம் அவனுக்கு. என்ன உலகம் என்பது சின்ன விஷயமா? பல்லாயிரம் கோடி அண்டங்களையும் ஆட்டி படைக்கு வல்லவன் அப்பேற்பட்ட தலைவன் ஒரு சின்ன விஷயத்துக்கு வருகிறான். ஆமாப்பா, ஒரு பிரதமர் வரார் ஒரு சின்ன கிராமத்துக்கு. ஒரு சின்ன கிராமத்துக்கு பிரதமர் வரார்னா. ஏன் அவ்வளவு இலகுவா. ஆமா, உலகம் என்பது முருகப்பெருமானுக்கு ஓர் சின்ன கடுகு போன்றது. உலகம் முருகப்பெருமானுக்கு ஒரு சின்ன கடுகு போன்றதா? அவன் பெரிய ஆற்றலப்பா. ஆற்றலா? அப்பப்பா…. என்ன வல்லமை உள்ள தலைவன். அவன், இவ்வளவு பெரிய புனிதமான ஒரு ஆற்றல். ஒரு கடுகு விஷயத்துக்கு வருகிறான். என்ன உலகமாற்றத்தை கடுகா? ஆமாப்பா, உலகமாற்றம் அவனுக்கு ஒரு கடுகுதான். எதை வேண்டுமானாலும் ஆட்டி படைக்கலாம். “செப்பரிய கூண்டோடு செம்பொன் ஆக்குவோம்” . இந்த உலகத்தையே எதை வேண்டுமானாலும் செய்யும் வல்லவன் வருகிறான். இன்னும் 6மாதம்தான் இருக்கு. என்னடா இது. இவ்வளவு பொருத்திங்கையா. உலகம் தோன்றி பலகோடி வருஷமாச்சி. இதுநாள் வரையிலும், மனிதர்கள் ஆட்சி செய்தார்கள். முடியாட்சி இப்பொழுது குடியாட்சி. ஆக, குடியாட்சியில் இவ்வளவு பெரிய ஒரு ஆற்றல் பொருந்திய தலைவன் இந்த உலகத்தை மாற்ற வருகிறான் என்றால் நாம் செய்த புண்ணியம். புண்ணியவான், முருகப்பெருமான். மிகப்பெரிய புண்ணியவான். எப்படிடா அவன் இந்த அளவுக்கு வான்தான்? மரணத்தை வென்ற மாமுனிவன், பந்தபாசமற்றவன், மனமாயை அற்றவன் ஆற்றல் பொருந்திய முருகன் உலகமக்களை வந்து காப்பாற்ற போறான். அது அகத்தியர் சன்மார்க்க சங்கம், சன்மார்க்கம், சன்மார்க்கம் வந்திட்டிருக்கு. பழக்க பட்டு போச்சி இல்லையா.  ஆகவே,, சரவணஜோதி கட்சி உலகத்தை ஆட்சி செய்யும்; சரவண ஜோதி கட்சி உலகத்தை ஆட்சி செய்யும் ; சரவண ஜோதி கட்சி உலகத்தை ஆட்சி செய்யும். ஆகவே, மக்களே எதிர்பாருங்கள் காலம் வந்துவிட்டது. வருகிறான் முருகன் வந்தான், வருவான் வருவான் என்று சொல்லி. வருவேன்நான் எப்ப சொல்றாரோ வந்துடுவேன்.

ஓம் அகத்தீசாய நாம

ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி

முருகா, சற்குருநாதா, சாந்தசொருபா, என் தந்தையே, எனது தாயே, தயவுடை தெய்வமே, தயாபரனே, தேவாதி தேவா உன் திருவடிக்கு தொண்டு செய்ய வாய்ப்பு கொடு தாயே அவ்வளவு தான்.

அன்பர்களே நான் ஒரு ஆண்டு சரியான உணவு இல்லாமல் இருக்கிறேன். ஆனால் மனசு தெம்பு இருக்கு ஆனால், உடம்பு தெம்பு இல்ல. வருவேன், வந்து செயல் படபோறேன். ஆகவே, உங்க ஒத்துழைப்பு… ஆகவே நீங்க கேக்கணும் என்னை. முருகா ஆசான் வெளிய வரணும்னு கேட்டிங்கனா வருவேன். அவன் உத்தரவு வந்துச்சினா வெளியே வருவேன் என்று சொல்லி முடிக்கிறேன். வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 549
Total Visit : 208457

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version