ஆன்மிகம் என்றால் என்ன?
ஓம் அகத்தீசாய நம
கேள்வி 1
ஆன்மிகம் என்றால் என்ன?
ஆன்மிகம் என்றால் முதலில் தலைவனை பற்றி அறிய வேண்டும். அந்த தலைவன் முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் அடுத்தது அகத்தீசர். இப்படி பல ஞானிகள் இருக்கிறார்கள். ஞானிகளை வணங்கி ஆசி பெறுகிற மக்கள்தான் உண்மை ஆன்மீகத்தை பற்றி தெரிந்து கொள்ள முடியும். ஆன்மிகம் என்பதே ஞானிகளை வணங்குவதுதான் ஆன்மீகம். ஞானிகளை வணங்கி ஆசி பெற விரும்புவதே ஆன்மிகம் ஆகும். இதுதான் ஆன்மிகம்.
அடுத்த ஆன்மீகம் ஒருவன்
முதல் ஒருவன் உயிர்கொலை செய்யக்கூடாது.
அடுத்து புலால் உண்ணக்கூடாது.
அடுத்து காலை மாலை எந்திரிச்சதும் ஓம் அகத்தீசாய நம என்று சொல்ல வேண்டும். ஒரு 5 நிமிஷம் சொல்லலாம்.
முதல் உயிர்கொலை தவிர்த்தல்,
புலால் மறுத்தல்,
முற்று பெற்ற முனிவர்களை வணங்குதல்,
மாதம் ஒருவருக்கு அன்னதானம் செய்தல் இதுதான் ஆன்மிகம்.
இதை செய்தால் ஒருவன் ஜென்மத்தை கடைத்தேற்றலாம்.
முதல் ஒருவனுக்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும். கடவுள் ஒருவர் உண்டு என்று நம்புவதே முதல் ஆன்மிகம்.
அந்த கடவுளை அடைவதற்கு யார் தயவு வேண்டுமென்றால் குரு அருள் வேண்டும்.
அந்த குருவும் ஆசான் ஞானபண்டிதனாகவும், முருகப்பெருமானாகவும், அகத்தீசராகவும் இருக்க வேண்டும் அல்லது இராமலிங்கசுவாமிகளாகஇருக்க வேண்டும் அல்லது போகமகரிஷியாக இருக்க வேண்டும் அல்லது பதஞ்சலி முனிவனாக இருக்க வேண்டும். இது போன்ற ஞானிகளை வணங்கினால் ஒருவன் ஆனமீகத்தில் வெற்றி பெற முடியும். இது ஆண்மீகத்திர்க்கு முதல் கல்வி.