சுத்த சன்மார்க்க வேண்டுகோள் (பகுதி 2) என்ற தலைப்பில் மகான் அரங்கமகா தேசிக சுவாமிகள் அருளிய அருளுரை

சுத்த சன்மார்க்க வேண்டுகோள் (பகுதி 2)

ஓம் அகத்தீசாய நம


அன்புள்ள பெரியோர்களே! தாய்மார்களே! வணக்கம்!


சிவபுராணம், கீர்த்தித் திருஅகவல், போற்றித் திருஅகவல், திருமந்திரம் உபதேசம், சுத்த சன்மார்க்க வேண்டுகோள், கோளறு பதிகம், விநாயகர் அகவல் பாடல்களை அன்பர்கள் பாராயணம் செய்து வருகிறார்கள். அவர்களெல்லாம் நீடு வாழ வேண்டுமென்று மனமார வாழ்த்துகின்றேன்.

இந்த சங்கம் முற்றுப்பெற்ற முனிவர்களை அறிமுகம் செய்யும். அவர்களுடைய ஆசியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லும். காரணம் ஞானிகள் என்றும், எந்த நேரத்திலும், “நினைப்பதற்கு முன்பாக நிற்கும் ஐயன்” என்பார்கள். எந்த நேரத்திலும் வந்து அருள் செய்யக் கூடியவர்கள்.

நாமெல்லாம் செத்தவனை சொல்லமாட்டோம். அவன் எவ்வளவு புகழ் வாய்ந்தவனாக இருந்தாலும் சரி, இந்த உலகமே போற்றக் கூடியவனாக இருந்தாலும் சரி, செத்தவனை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

மகான் இராமலிங்கசுவாமிகள், மகான் திருமூலதேவர், மகான் மாணிக்கவாசகர், மகான் திருஞானசம்பந்தர், மகான் ஔவையார் போன்ற ஞானிகளை வணங்க சொல்கிறோம். ஞானிகள் பெருமையை எடுத்துப் பேசுகின்றோம்.

ஏன் ஞானிகள் பெருமையை எடுத்துச் சொல்ல வேண்டும்? மகான் இராமலிங்க சுவாமிகள் இயற்றிய சுத்த சன்மார்க்க வேண்டுகோளை பாராயணம் செய்யுங்கள் என்று சொல்கின்றோம். அந்த நூலைத் தொடும்போதே மகான் இராமலிங்கசுவாமிகள் பார்ப்பார். நோக்கம் என்ன? என்று பார்ப்பார். அவர்கள் எதை விரும்புகின்றார்களோ அதை செய்து தரக்கூடியவர்தான் ஆசான் இராமலிங்க சுவாமிகள்.

அருட்பாவின் சுத்த சன்மார்க்க வேண்டுகோளை தினமும் பாராயணம் செய்தால், நன்மை தீமையை உணர முடியும். முதலில் நண்பன் யார்? பகைவன் யார்? என்று அறிந்து கொள்ள முடியும்.

நல்லபடி உதவி செய்பவனாக இருப்பான். தூய மனது உள்ள நண்பனாக இருப்பான். அவன் மீதே சந்தேகப்படுவான். ஆசானுடைய ஆசி இருந்து தினமும் திருஅருட்பா போன்ற ஞானிகளின் நூல்களை தொட்டு படித்தால், “அவன் நல்லவன் அல்லவா? அவனை பகைத்துக் கொள்ளாதே, சந்தேகப்படாதே, அப்படியே அவன் கோபமாகப் பேசினாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு வரும். மேலும் நண்பனைப் பற்றி புரிந்து கொள்ளலாம்.

     பேச்சில் இனிமையாக பேசுகிறான். ஆனால் நமக்கு விரோதமாக, இதயத்தில் நஞ்சு உள்ளவனாக இருக்கின்றான். நம் வளர்ச்சியை விரும்பாதவனாக இருக்கின்றான். வளர்ச்சியை விரும்பாமலேயே நம்மோடு சார்ந்திருப்பான். தலைவன் பார்க்கிறான். இவன் இப்படி முரண்பட்டவனாக இருக்கிறான்.

     மகான் இராமலிங்கசுவாமிகளை பூஜை செய்தால், இவனைப் போன்றவன் நம்முடன் இருந்தால், அவன் உள்ளத்தில் இருக்கும் உணர்வுகள் நமக்கு புரிந்துவிடும். நமக்கு விரோதமானவன், ஏதோ நடிக்கிறான். நாமும் நடிக்க வேண்டுமென்று அந்த உணர்வு வரும், இது தெரியாவிட்டால், நம்முடனேயே இருந்து தக்க சமயத்தில் பிரச்சனை செய்வான்.

மனைவி மீது திடீரென்று சந்தேகப்படுவான். ஆசானை வணங்குகின்றவனுக்கு சந்தேகப்படுகிறாய் மனமே? இது பாவச்செயல் என்று புரியும். மனைவி மனம் நொந்தால் நமக்கு பாவமும் பிரச்சனையும் வரும். சந்தேகப்படாதே!

ஆசான் இராமலிங்கசுவாமிகள் அருளிய சுத்தசன்மார்க்க வேண்டுகோளைப் படித்தால், என்ன விவசாயம் செய்யலாம்? என்பதை அறியலாம். தக்காளி உற்பத்தி செய்யலாம் என்று நினைப்பான். கிலோ நாலணாவிற்கு (25பைசாவிற்கு) போகும். இது மோசம் என்று நினைத்து குச்சிவள்ளிக் கிழங்கு பயிரிடுவான். அது மூட்டை பத்து ரூபாய்க்குக் கூட விற்காது.

எதைத் தொட்டாலும் தடைபடும். சிலபேர் என்ன செய்வான், மிளகாய் வற்றல் வாங்கி வைப்பான். இவன் வாங்கும்போது கிலோ இருபது ரூபாயாக இருக்கும். நன்றாக விற்கும் என்று நினைத்து வாங்கி வைப்பான். ஆயிரம், இரண்டாயிரம் கிலோ வாங்கியிருப்பான். வாங்கி வைத்தது என்னாகும்? இருபது ரூபாய்க்கு வாங்கி வைத்தது ஐந்து ரூபாய்க்கு வந்துவிடும். நஷ்டப்படும்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? திருவருள் துணையில்லாமல் எந்த காரியத்தை செய்தாலும் நஷ்டப்படும்.

திருவருள் துணையிருந்தால் வியாபாரத்திலும் இன்னது செய்தால் நமக்கு லாபம், இன்னது செய்தால் லாபம் வராது என்பதை உணரலாம். இன்ன விவசாயம் செய்தால் நன்மை. இன்னது லாபம் தராது என்பதையும் உணரலாம்.

மகான் இராமலிங்கசுவாமிகள் ஆசியைப் பெற்ற மக்கள் உடல் ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். புலால் உண்பது, மாமிசம் உண்பது குற்றம் என்பது உணர்த்தப்படும். முதலில் சந்தேகம் தெளியும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

இன்ன விவசாயம் செய்தால் நன்றாக இருக்கும் என்று உணர்த்தப்படும், வியாபாரத்தில் நல்ல லாபம் வருவது பற்றி தெரியும், நண்பனைப் பற்றி தெரியும். ஒவ்வொரு செயலும் உணர்த்தப்படும். இன்ன செயல் செய்வது நல்லது, இன்ன செயல் கெட்டது என்று உணர்த்தப்படும். இதற்கே ஆசி வேண்டும்.

ஒவ்வொன்றிலும் நன்மை தீமையை உணர்வதற்குரிய அறிவு நமக்கு இருக்காது. எல்லாவற்றையும் செய்த பின்தான் சிந்திப்பார்கள். சில பேர் வீடுகட்ட முயற்சிப்பார்கள், தடைபட்டுப் போகும். கடன் சுமை வரும்.

இந்த காலகட்டத்திற்கு இந்த நேரத்திற்கு இது அவசியமில்லை என்று நினைப்பதற்கும் ஆசி வேண்டும். இல்லையென்றால் என்ன செய்வான்? மனதில் கற்பனை செய்து கொண்டு, அடாது செய்து விடுவான்.

ஒன்று கிடக்க ஒன்று செய்து கடன் சுமைக்கு ஆட்படுவான். திருஅருட்பாவை படித்த மக்களின் பிள்ளைகளுக்கு நல்லபடி திருமணம் நடக்கும், திருமணத்தடை இருக்காது, வயதிற்கு வந்த பெண்களுக்கு திருமணம் நடக்காவிட்டால் தாய் தந்தையர் ரொம்ப மனம் நொந்து போவார்கள்.

ஆக இதுபோன்ற சுபகாரியங்கள் நல்லபடி நடக்கும், தடையிருக்காது. பிள்ளைகளுக்கு நல்ல கல்வி இருக்கும், கடன் சுமை இருக்காது. என்ன ஏற்படுமோ? என்ற ஏக்கம், பயம் இருக்காது.

திருஅருட்பாவை படிக்கின்றவர்களுக்கு ஜீவகாருண்யம் வரும், புலால் உண்ண மாட்டார்கள், மது அருந்த மாட்டார்கள், பொய் சொல்லமாட்டார்கள். பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தலைவன் அருள் இருக்கு.

மகான் இராமலிங்கசுவாமிகள் ஆசி இருந்தால் செல்வம் தானே வந்து குவியும், பொய் சொல்லமாட்டார்கள். அதே சமயத்தில் பொறாமை கொள்ளமாட்டார்கள், பேராசை இருக்காது.

மகான் இராமலிங்கசுவாமிகள் இயற்றிய சுத்த சன்மார்க்க வேண்டுகோளை படிக்கும்போது இவ்வளவு நன்மை கிடைக்கும்.

அட பாவி! என்ன கொடுமை! ஐயாயிரம் கொடுத்து இருபதாயிரம் என்று எழுதி வாங்கியிருப்பான், பேராசை. ஐயாயிரத்திற்கு பத்தாயிரம் எழுதி வாங்குவான். வீடு, காட்டையெல்லாம் கைப்பற்றி விடுவான். அவனுக்கே தெரியாது, பேராசை!

அவனுடைய பேராசை, அவன் வீட்டையும், நிலத்தையும் கைப்பற்ற வேண்டுமென அவனுடைய நோக்கம் இருக்குமே தவிர, “இது பாவம்! இந்த சொத்து எத்தனை ஆண்டுகள் நமக்கு இருக்கப் போகிறது. இதுபோன்று அடாது செய்யக் கூடாது!” என்று உணர்வதற்கும் ஆசி வேண்டும்.

ஆசான் இராமலிங்கசுவாமிகள் ஆசி இருந்தால்தான், “அப்பப்பா! கொடுமை! ஏன் இந்த மாதிரி உணர்வு உனக்கு வர வேண்டும். பாவி! எவ்வளவு பெரிய கொடுமை அவன் குடும்பத்தையே நாசப்படுத்துகின்றாயே, உன்னை நான் கவனிக்காவிட்டால் அந்த குடும்பத்தையே நாசப்படுத்தி விடுவாயடா பாவி!” என்று மனம் சொல்ல வேண்டும்.

சுத்தசன்மார்க்க வேண்டுகோளை படித்தால் இதுபோன்ற எண்ணம் வராது. வேண்டாம்! நீதி இல்லாத செயலை செய்கின்றோம் என்ற உணர்வு வரும். வேண்டாம் என்று விட்டுக் கொடுக்கின்ற அறிவு வேண்டுமல்லவா.

விட்டுக் கொடுத்தல், மனைவியே தவறு செய்கிறாள். ஏதோ கோபமாகப் பேசியிருக்கலாம். அதை மன்னிக்கவும் ஆசி வேண்டுமல்லவா “அவள் எப்படி பேசலாம்? அவள் எப்படி பேசலாம் என்று நினைக்கக் கூடாது. பேசிவிட்டுப் போகிறாள், மனைவிதானே” என்று நினைக்கின்ற அளவிற்கு ஆசி வேண்டும் அல்லவா? மனைவி பேசினால், பேசிவிட்டுப் போகட்டும்.

ஆக, குற்றத்தை மன்னிக்கும் ஆசி வேண்டும். அதை மறப்பதற்கு அதைவிட ஆசி வேண்டும், குற்றத்தை மன்னிக்க ஆசி வேண்டும். அதை மறப்பதற்கும் ஆசி வேண்டும்.

திருவருள் துணை இருந்தால்தான் முடியும். திருவருள் துணையிருந்தால் குற்றம் செய்வதற்கு முன்னே திருத்திக் கொள்ளலாம். திருவருள் துணை இருந்தால் பாவம் செய்வதற்கு முன்னே தடுத்துக் கொள்ளலாம்.

பாவம் செய்தபின் என்ன செய்ய முடியும்? ஒருவன் என்ன செய்தான், மற்றொருவன் காலை உடைத்து நொறுக்கி விட்டான். அதற்கு அப்புறம் நீ வருந்தி என்ன செய்யப் போகிறாய்? கடவுள் உன்னை ஏற்றுக்கொள்வானா?

கடவுள் ஆசான் இராமலிங்கசுவாமிகள் ஆசி இருந்தால், இது போன்ற காரியங்களை செய்யாமல், சிந்திப்பான். மகான் இராமலிங்கசுவாமிகள் ஆசி இருந்தால், அது போன்ற சந்தர்ப்பம் வராது செய்து விடுவார். பாவம் செய்துவிட்டு சிந்திக்க மாட்டான்.

சிலபேர் கோபத்தில் மனைவியை அடித்து விடுவான். அப்படியே மனைவி நொந்து போவாள். மூன்று குழந்தைகள் இருக்கும். அடித்துவிட்டு சிந்திப்பான். செய்துவிட்டு சிந்திப்பது அரை மனிதன். இல்லை! கால் மனிதன் அவன்!

செய்வதற்கு முன்னே சிந்தித்து நிறுத்திக் கொள்பவன் பெரிய மனிதன் என்றார். இந்த அறிவு எப்போது வருமென்றால், மகான் இராமலிங்க சுவாமிகள் போன்ற அறிவுக்கடலாக, அருள் கடலாக இருக்கக்கூடிய ஆசான் ஆசி இல்லாமல் வரவே வராது. இல்லறத்தை நல்லபடியாக நடத்தலாம்.

பாவியாகாமல், இருப்பதற்கு திருஅருட்பா படிக்க வேண்டும்.

பண்புடன் வாழ்வதற்கு திருஅருட்பா படிக்க வேண்டும்.

இனம் புரியாத கவலை நீங்குவதற்கு திருஅருட்பா படிக்க வேண்டும்.

நண்பனை புரிந்து கொள்ள திருஅருட்பா படிக்க வேண்டும்.

மனைவியை புரிந்து கொள்ள திருஅருட்பா படிக்க வேண்டும்.

ஞானத்தை அறிந்துகொள்ள திருஅருட்பா படிக்க வேண்டும்.

     ஞானத்தைப் பெற்றுக் கொள்ளவும் திருஅருட்பா படிக்க வேண்டும்.

     வைராக்கியம் வேண்டுமா திருஅருட்பா படிக்க வேண்டும்.

     திருஅருட்பா போன்ற நூல்களை ஏன் படிக்க வேண்டும்? மனித சமுதாயம் ஒன்று கிடக்க ஒன்று செய்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அவர்கள் படித்து, ஆசானின் ஆசியை பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த அருளை எல்லோரும் பெற்றுக் கொள்ள வேண்டும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.

     அகீர் பகீர் என்று குடும்பத்தில் நடக்கக் கூடாது. சுத்த சன்மார்க்க வேண்டுகோளை படிக்கின்றவர்களுடைய குடுமபத்தில் அகீர் பகீரென்று நடக்காது. “நம் மகளை திருமணம் செய்து கொடுத்தோம். கணவன் மனைவிக்குள் பிரச்சனை வந்து விட்டதாம். ஐயோ, தீ வைத்துக் கொண்டாளே! கொடுமை. மகள் ஆறு மாத கர்ப்பஸ்திரி தீ வைத்துக் கொண்டாளே” இது போன்ற கொடுமை நடக்காது. ஏன் திருஅருட்பா படிக்க வேண்டுமென்றால், இது போன்று நடக்கக் கூடாது, நல்லபடி வாழ்கிறாள் மகள்.

     ஆகா, நல்லபடி வாழ்கிறாள் மகள். அழகான குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் மகள். என் பேரப்பிள்ளையை நான் பார்த்தேன். அந்தக் குழந்தையை ஆரத்தழுவினேன், முத்தமிட்டேன். இதற்கு ஆசானுடைய ஆசி இருக்க வேண்டும். உன்னுடைய பிள்ளைகள் நல்லபடியாக இருப்பதற்கு நீ திருஅருட்பா படிக்க வேண்டும். ஆசானுடைய ஆசி இருக்க வேண்டும்.

     நீ கற்பனை செய்யலாம். நம் மகளை உயர்ந்த உத்தியோகம் உள்ளவனுக்கு கொடுத்துவிட்டோம். உயர்ந்த உத்தியோகம் உள்ளவன் என்று கொடுத்தாயே என்ன நடக்கிறது அங்கே? “உங்க அப்பன் என்ன கொடுத்தான்? உங்க வீட்டில் என்ன கொடுத்தார்கள்?” என்று கேட்பான். வாரிசு இல்லை, அநாதை. அவருடைய மனைவி அழுதாள்.

     “ஐயோ! என் வீட்டுக்காரர் போய்விட்டார். நான் என்ன செய்வேன் ஐயா! எல்லோரையும் உயிர் பெறச் செய்கின்றீரே! இறந்தவரை எழுப்பக் கூடிய வல்லமை உமக்கு உண்டு. உன் திருவடியை வணங்கிக் கேட்கிறேன். எனக்கு மாங்கல்ய பிச்சை கொடுங்கள்” என்று கேட்டாளாம்.

     எனக்கு வேறு யாரும் இல்லை, அவர்தான். அவர் போய்விட்டால் எனக்கு உலகத்தில் யாரும் இல்லை.

     என்ன இருக்கு? நான் எங்கு போவேன்? நாங்கள் இருவருமே பிள்ளைகள் இல்லாதவர்கள், அநாதையாக இருக்கிறோம். கொஞ்சம் தயவு செய்யுங்கள் என்றாராம். மகான் இராமலிங்கசுவாமிகள் அப்படியே சிந்தித்தார்.

     ஐயோ! பவாம்! இந்த அம்மாளுக்கு வயது அறுபது ஆகிறது. இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்கலாம். நியாயமே! என்றெண்ணி அந்த பெரியவருக்கு உயிர் கொடுத்தார்.

     உயிர் கொடுத்தவுடன் அந்த பெரியவர் எழுந்தார். “அம்மா! வீரம்மா! வீரம்மா!” என்றார். “சொல் சொல்” என்றாள் அந்த அம்மா. மகான் இராமலிங்கசுவாமிகள் உயிர் கொடுத்தார், எழுப்பிவிட்டார். எழுப்பிவிட்டவுடன் சொல்லுங்க சொல்லுங்க என்றார். “அடி வீரம்மா! நான் கருவாட்டுக் குழம்பு கேட்ட்டேனடி! ஏண்டி கொடுக்கவில்லை” என்றான்.

     எப்படி இருக்கும் அவருக்கு? இதுவா அவருடைய எண்ணம். “கருவாட்டுக்குழம்பு கேட்டேனடி. ஏன் கொடுக்கலே வீரம்மா” என்றான். ஆக, இவனை எழுப்பி என்ன செய்ய முடியும்? மகான் இராமலிங்கசுவாமிகள் பார்த்தார் நான் இப்படிப்பட்டவர்களை எழுப்ப விரும்பவில்லை என்றார்.

     எவன் ஒருவனுக்கு உண்மை தெரியவில்லையோ? அவனுக்கு உண்மை சொன்னால், அன்றே இறந்தவன் எழுகின்றான். அவன்தான் உயிரோடு இருக்கிறான்.

     ஆக, மகான் இராமலிங்கசுவாமிகள் இறந்தவனை எழுப்ப வேண்டுமென சொல்வது. அறியாதவன், புரியாதவன், உண்மைப் பொருள் தெரியாதவனுக்கு சொல்வதுதான். அதுதான் எழப்புவது. ஏனென்றால் உண்மைப்பொருள் தெரியாவிட்டால் அவன் இறந்தவனுக்கு ஒப்பானவன்.

     நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் என்றார். நான் நைந்து போகக்கூடாது என்றார். அடுத்து, இப்போது சொல்வது மூன்றாவது கவி.

                அண்ணாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல்வேண்டும்

அழியாததனிவடிவம்யானடைதல்வேண்டும்

கண்ணார நினையெங்குங் கண்டு உவத்தல் வேண்டும்

காணாத காட்சியெலாங் கண்டுகொளல் வேண்டும்

      பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்

            பரமானந் தபெருங்க்கூத்து ஆடியிடல் வேண்டும்

      உள்னாடி உயிர்களுறும் துயர்தவிர்த்தல் வேண்டும்

            உனைப்பிரியாது உருகின்ற வுறவதுவேண் டுவனே.

    சுத்த சன்மார்க்க வேண்டுகோள் – கவி எண் 3

முதல் கவியில் அப்பாஎன்றார். இரண்டாவது கவியில் ஐயா என்றார். இது மூன்றாவது கவி. இதில் அண்ணாஎங்கிறார். அண்ணா என்றால் அண்ணாமலையானேஎன்று அர்த்தம். அண்ணாமலையான்அண்ணாமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! கடவுளே! என்று பொருள்.
தலைவனே! என்னுடைய வேண்டுகோளை ஏற்றுகொள் என்று சொன்னார். மகான் இராமலிங்கசுவாமிகள் முதல் பாடலில், உலக உயிர்களுகெல்லாம் நன்மை செய்ய வேண்டுமென்று சொன்னார். பிறகு உன் பெருமையை எடுத்து பேச வேண்டுமென்று சொன்னார்.

செப்பாத மேல் நிலைமேல் – புருவமத்தி ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்றார். தப்பு செய்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றார். அடி முடியறிய வேண்டுமென்றார்.

பொய்யாது – பொய் பேசாது இருக்க வேண்டுமென்றார். அருட்பெருஞ்சோதி தன் கையுற வேண்டுமென்றார். இறந்தவனை எழுப்ப வேண்டுமென்று சொன்னார். நையாமல் இருக்க வேண்டுமென்று சொன்னார்.

இப்போது தலைவனை அண்ணாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல்வேண்டும் – அண்ணாமலையானே! சிவபெருமானே! என் வேண்டுகோளை கேட்டு அருள் செய்ய வேண்டுமென்று சொன்னார்.  மகான் இராமலிங்கம் என்ன் கேட்கப் போகிறான்? என்று பார்த்தார். சிவபெருமான். தலைவன் என்ன வேண்டும் என்றார்.

அழியாததனிவடிவம்யானடைதல்வேண்டும் என்றார். இப்போது இருக்கும் நமது வடிவம் தாய் தந்தையால் எடுத்த தேகம். இந்த வடிவம் அல்லது உருவம், இந்த உடம்பு தாய் தந்தையால் எடுத்த தேகம். இது காமதேகம்.

இந்த தேகத்தோடு இருந்தால் நான் செத்துவிடுவேன். ஆகவே எனக்கு தனி வடிவம் வேண்டும்.

அந்த தேகம் என்ன தேகம் என்றால், பசியற்ற தேகம், காமம் அற்ற தேகம், நரைதிரை அற்ற தேகம், மரணமில்லா தேகம், எக்காலத்திலும் அழியாத தேகம் என்று சொன்னார். அது போன்ற தேகம் எனக்கு வேண்டும் என்று சொன்னார். திருமந்திரத்தில் ஒரு பாடல் இருக்கிறது.

இருந்தேன்இக்காயத்தேஎண்ணிலிகோடி

இருந்தேன்இராப்பகல்அற்றஇடத்தே

இருந்தேன்இமையவர்ஏத்தும்பதத்தே

இருந்தேன்என்நந்திஇணையடிக்கீழே.

திருமந்திரம் – திருமூலர் வரலாறு – கவி எண் 80

                காயம் என்றால் உடம்பு. இந்த உடம்போடு பல கோடி யுகம்இருந்தேன் எண்ணிலடங்காத யுகம் இருந்ததற்கு காரணம், புருவமத்தி ரகசியத்தை அறிந்தேன் என்று சொல்வார்.
                ஆக உன் திருவருளால் அந்த ரக்சியத்தை அறிந்திருக்கின்றேன். நான் அழியாத வடிவம் பெற வேண்டும்.

     அண்ணாநான் வேண்டுதல் கேட்டருள்புரிதல்வேண்டும்

அழியாததனிவடிவம்யானடைதல்வேண்டும்

     தனி வடிவம் – தனித்தன்மையான வடிவம். யான் அடைதல் வேண்டும். யான் பெறுதல் வேண்டுமென்று ஒஸ்ல்வார். நியாயமான வேண்டுகோள்.

அண்ணாநான்வேண்டுதல்கேட்டருள்புரிதல்வேண்டும்

அழியாததனிவடிவம்யானடைதல்வேண்டும்

கண்ணார நினையெங்குங் கண்டு உவத்தல் வேண்டும்

சிவத்தை எப்படி பார்க்கின்றார்கள்? எல்லா இடத்திலும் சிவத்தைப் பார்க்கின்றார்கள். எந்த திசையில் திரும்பினாலும் சிவ வடிவம் இருக்கும்.

கண்ணார நினையெங்குங் கண்டு உவத்தல் வேண்டும் – மனிதவர்க்கம் கான முடியுமா இந்த ரகசியத்தை? கண்ணை மூடினால் ஒரு கோடி சூரியப்பிரகாசமுள்ள ஜோதி தெரியும். பல வண்ண நிறங்கள், கண்ணைக் கூசும், வண்ணநிறங்கள் தெரியும். அப்பேர்ப்பட்ட வண்ணங்கள். பல வகையான வண்ணங்களை கண்ணில் காண்பார்கள்.

காணாதகாட்சியெலாங்கண்டுகொளல்வேண்டும்மனிதவர்க்கம் காண முடியுமா இந்தரகசியத்தை? கண்ணை மூடினால் ஒருகோடி சூரியப்பிரகாசமுள்ள ஜோதி தெரியும். பலவண்ண நிறங்கள், கண்ணைக் கூசும், வண்ணநிறங்கள்தெரியும். அப்பேர்ப்பட்ட வண்ணங்கள். பல வகையான வண்ணங்களைகண்ணில் காண்பார்கள்.

காணாதகாட்சியெலாங்கண்டுகொளல்வேண்டும்அது போன்ற காட்சிகளை நான் காண வேண்டும். யோகிகளுக்கு மட்டும்தான் புரியும் இஹ்டு வாசி அல்லஹ்டு மூச்சுக்காற்று வசப்பட்ட மக்களுக்கும், உள்ளே ஜோதி தோன்றி பல வகையான காட்சிகள் தெரியும். கண்ணார நினையெங்குங் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சியெலாங் கண்டுகொளல் வேண்டும் – மனித வர்க்கம் காணாத காட்சிகளை நான் காண வேண்டும். அப்படி ஆசான், தலவனை வேண்டுகின்றார்.

பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்

            பரமானந் தபெருங்க்கூத்து ஆடியிடல் வேண்டும்

      உள்நாடி உயிர்களுறும் துயர்தவிர்த்தல் வேண்டும்

            உனைப்பிரியாது உருகின்ற வுறவதுவேண் டுவனே.

                                               

      பண் என்றால் எதுகைக்காக வரும். பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும். பாடி உறல் வேண்டும். பாடினால், உன் பெருமையை பாட வேண்டும் என்றும், உன்னோடு சார வேண்டும், என்றும்,

பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்

            பரமானந் தபெருங்க்கூத்து ஆடியிடல் வேண்டும்

     பரமானந்தப் பெருங்கூத்து சாதாரண விசயமல்ல. அந்த பெருங்கூத்து உள்ளே ஜோதி தெரியும். அது சொல்ல முடியாத ஆனந்தம். அந்த காட்சியை காண்கின்ற மக்கள் துள்ளிக் குதிப்பார்கள். அந்த அளவிற்கு ஒரு ஆனந்தம் வரும். அந்த அளவிற்கு சொல்லமுடியாத ஒரு மகிழ்ச்சி வரும் என்றார்.

கண்டது செய்து கருணை மட்டுப் பருகிக் களித்து

மிண்டுகின்றேனை விடுதி கண்டாய் நின் விரை மலர்த் தாள்

பண்டு தந்தால் போல் பணித்து பணிசெயக் கூவித்து, என்னைக்

கொண்டு என் தாய் களையாய் களை ஆய குதுகுதுப்பே.

திருவாசகம் – தீத்தல் விண்ணப்பம் – கவி எண் – 33

     

      என்றார் திருவாசகத்தில். பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும். பரமானந்தப் பெருங்கூத்து – வெளியில் தெரியாத ரகசியங்கள். வெளியில் தெரியாத அந்த காட்சியைக் கண்டு அளவில்லா மகிழ்ச்சியடைவார்கள் ஞானிகள்.

     அடுத்து ஆறாவது வரி, உள்நாடி உயிர்களுறும் துயர்தவிர்த்தல் வேண்டும், உனைப்பிரியாது உருகின்ற வுறவதுவேண் டுவனே – இதுநாள் வரை புறத்தே பார்ப்பதுதான் வழக்கம். ஏதாவது உதவி கேட்டால் தருவார்கள். குறிப்பால் அறிந்து சொல்ல முடியாது.

     கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

      மாறாநீர் வையக்கு அணி.

    திருக்குறள் – குறிப்பறிதல் – குறள் எண் – 701

என்றார் மகான் வள்ளுவர். ஒருவன் சொல்லாமலே அகக்குறிப்பு அறிந்து அதை புரிந்து செயல்படுவன் இந்த உலகத்திற்கு மிகப் பெரிய அறிவாளி. அவன் அணிகலன் போன்றவன் என்றார். மாறாநீர் வயக்கு அணி என்றார். இங்கே உள்நாடி உயிர்களுறும் துயர்தவிர்த்தல் வேண்டும் என்றார்.

                                         

     ஒருவனை பார்க்கும் போதே சொல்லாமலேயே அவன் என்ன நினைக்கின்றான்? அவன் இதயம் எப்படி? அவன் என்ன துன்பத்தில் இருக்கின்றான்? உள்நாடி உயிர்களுறும் துயர்தவிர்த்தல் வேண்டும்.

      அவன் சொல்லாமலேயே அவன் இதயத்தில் இருக்கும், மனதில் இருக்கும், துனபத்தை உணர்ந்து தவிர்த்தல் – நீக்குதல் வேண்டும்.

உள்நாடி உயிர்களுறும் துயர்தவிர்த்தல் வேண்டும்

            உனைப்பிரியாது உருகின்ற வுறவதுவேண் டுவனே.

                உன்னைப் பிரியாது இருக்கவேண்டும். ஒவ்வொருவரையும் பார்க்கின்றபோதே, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நண்பனாக இருந்தாலும்சரி, பகைவனாக இருந்தாலும் சரி, அவனுடைய சிந்தையில் என்ன குறை இருக்கின்றதோ, அதை புரிந்து அந்த குறையை நீக்கவேண்டும் என்று சொல்கிறார்.
               
ஆக, பெரியோர்களின் வேண்டுகோள். இது முக்கியமான வேண்டுகோள். இதெல்லாம் உங்களுடைய ஆசியால் நான் பெறவேண்டும். முன்னே சொன்னது உயிர்களுக்குஅன்பு செய்ய வேண்டும் என்றுசொன்னார். இங்கே, நான் மக்களிடம்பேசாமலேயே, அவர்கள் உள்ளத்தில் என்னகுறை இருக்கிறதோ, புரிந்து அதை நீக்க அருள்செய்ய வேண்டும் என்கிறார். இது மூன்றாவது பாடலின்சாரம், அடுத்து நாலாவது பாடல்,
அத்தாநான்வேண்டுதல்கேட்டருள்புரிதல்வேண்டும்

அருட்பெருஞ்ஜோதியைப்பெற்றேயகம்களித்தல்வேண்டும்

செத்தாரைமீட்டும்இங்கேயெழுப்பியிடல்வேண்டும்

திருச்சபைக்கேயடிமைகளாச்செய்வித்தல்வேண்டும்

ஒத்தாரும்உயர்ந்தாரும்தாழ்ந்தாரும்எவரும்

ஒருமையுளராகியுலகியல்நடத்தல்வேண்டும்

எத்தாலும்அழியாதவடிவதிலேநானும்    

எந்தாயுமொன்றாகஇனிதுறல்வேண்டுவனே.

சுத்த சன்மார்க்க வேண்டுகோள் – கவி எண் – 4

     முதலில் அண்ணா என்றார். அது அண்ணாமலையானை சிவபெருமானை குறிப்பதாகும். இப்போது அத்தா என்கிறார்.

அத்தாநான்வேண்டுதல்கேட்டருள்புரிதல்வேண்டும்

அருட்பெருஞ்ஜோதியைப்பெற்றேயகம்களித்தல்வேண்டும்

                இப்ப நாம் ஏற்றுவதெல்லாம் மின்சார விளக்காக இருக்கலாம் அல்லது எண்ணெய் விளக்காக இருக்கலாம், இங்கே புண்ணியத்தால், தவத்தால், மிக்க தவத்தாலும், புண்ணியத்தாலும் புருவமத்தியில் உள்ளே ஜோதி தெரியும். அதைதான் அருப்பெருஞ்சோதி என்று ஆசான் சொல்கிறார்.

     அத்தா என்றால் தலைவன், அச்சா என்பார், அண்ணா என்பார், அத்தா என்பார். தலவனை அத்தா எண்று சொல்லுவார்.

அத்தாநான்வேண்டுதல்கேட்டருள்புரிதல்வேண்டும்

அருட்பெருஞ்ஜோதியைப்பெற்றேயகம்களித்தல்வேண்டும்

                அகம் என்றால் மனது, மகிழ்ச்சியடைய வேண்டும் என்றார். அந்த மகிழ்ச்சியை நான்உன் திருவருளால் அடைய வேண்டும். ஒருவன்ஜோதியை காட்டுவான். ஜோதியை கண்டவன்தான் இன்னொருவருக்குஜோதியை காட்ட முடியும். மகான்இராமலிங்கசுவாமிகள் அவருடைய உடம்புக்குள்ளே ஜோதியைகண்டவர். தன்னுள்ளே ஜோதியைக் கண்டு மகிழ்ச்சியடைந்தவர். அவர்ஆசியில்லாமல் நாம் ஜோதியை காணமுடியாது.
அருட்பெருஞ்ஜோதியைப்பெற்றேயகம்களித்தல்வேண்டும்நான் அந்த ஜோதியைப் பெற்றுமகிழ்ச்சியடைதல் வேண்டும். இது அவருடைய வேண்டுகோள். செத்தாரை மீட்டும்இங்கே யெழுப்பியிடல் வேண்டும் – முன்னமே சொல்லியிருக்கின்றோம். செத்தவரை என்றால் செத்தவனை எழுப்பிவிட வேண்டிய அவசியமில்லை. எவன் உண்மைப்பொருள் தெரியாதவனோ அவனை எழுப்பிவிட வேண்டும் என்றார்.

செத்தாரைமீட்டும்இங்கேயெழுப்பியிடல்வேண்டும்

திருச்சபைக்கேயடிமைகளாச்செய்வித்தல்வேண்டும்

அறியாமை உள்ளவனை தெளிவுபடுத்தி, உன்னுடைய திருவடிக்கு தொண்டு செய்யக்கூடிய அடிமையாக்கிகத் தர வேண்டும் என்கிறார்.

ஒத்தாரும்உயர்ந்தாரும்தாழ்ந்தாரும்எவரும்

ஒருமையுளராகியுலகியல்நடத்தல்வேண்டும்

      ஒத்தார் – என்னைச் சேர்ந்தவர்கள். எதுகைக்காகவும் இருக்கலாம். அத்தா என்னும்போது இங்கே ஒத்தார் என்று வர வேண்டும். என்னைப் போன்றவர்கள். என்னைவிட மேல் நிலைமையில் இருந்தாலும் சரி. தாழ்ந்தாரும் – கல்வி இல்லாதவன்,பாவிகள், அறிவிலாதவன். எவரும் – மற்ற யாராக இருந்தாலும் சரி, என்னைப் போன்றவர்கள், என்னைவிட மேலான மக்கள் அல்லது தாழ்ந்தவர்கள் எந்த அறிவும் இல்லாத மக்கள், எவரும் – யாராக இருந்தாலும்,

ஒருமையுளராகியுலகியல்நடத்தல்வேண்டும் – எல்லோரும் ஒற்றுமையாக இருந்டு வாழ்ந்திட வேண்டும். இது வேண்டுகோள். உலக மக்களெல்லாம் ஒற்றுமையாக வாழ வேண்டும், பெரிய மனிதர் அல்லவா

ஒத்தாரும்உயர்ந்தாரும்தாழ்ந்தாரும்எவரும்

ஒருமையுளராகியுலகியல்நடத்தல்வேண்டும்

                எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சாதிப்பூசல்இருக்கக் கூடாது, மதப்பூசல் இருக்கக்கூடாது. பகைமை இல்லாது எல்லோரும்ஒற்றுமையாக இருக்க வேண்டும். பெரியமனிதனுடைய வேண்டுகோள்.
                சிலபேரின் வேண்டுகோள், இவன் அழிய வேண்டும். அவன் அழிய வேண்டும் என்றுஇருக்கும். நாம் முன்னமே சொல்லியிருக்கிறோம். சில கோவில்களில் கோழியை வேலில் குத்திவைத்திருப்பான். என்னென்று கேட்டால், எங்கள் வீட்டில் நகைகாணாமல் போச்சு. அவன் அப்படிசெய்துவிட்டான், இவன் இப்படி செய்துவிட்டான். அவன் அழிந்து போகணும் என்பதற்காகஅந்த கோழியை வைத்திருப்பான். அதுபாவம்!
                இவருடைய வேண்டுகோள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் யாராக இருந்தாலும் சரி, ஒருமையுள ராகியுல கியல்நடத்தல் வேண்டும். ஒற்றுமையாக இருந்து உலகத்தில் வாழ வேண்டும் என்றார்.

எத்தாலும்அழியாதவடிவதிலேநானும்    

எந்தாயுமொன்றாகஇனிதுறல்வேண்டுவனே.

                எத்தாலும் என்றால் எப்பொழுதும். அங்கேஅத்தா என்று வருவதால் இங்கேஎத்தா என்று வருகிறது.
எத்தாலும்அழியாதவடிவதிலேநானும்    

எந்தாயுமொன்றாகஇனிதுறல்வேண்டுவனே.

                முன்னமே சொல்லியிருக்கின்றார். இந்த பாடலிலேயே, எத்தாலும் அழியாத வடிவதிலே நானும் – அந்த வடிவம் பெற வேண்டும். அப்படியென்றால், இந்த உடம்பு எப்படி இருக்க வேண்டும். காமம் அற்று இருக்க வேண்டும். காமம் அற்று இருக்க வேண்டுமெனில் பசி அற்று இருக்க வேண்டும். பசி அற்று இருந்தால் செத்துப் போவான். ஆனால் ஞானிகளுக்கு பசிக்காது. அப்ப ஞானிகளுக்கு பசி வராது. என்ன காரணம்? உள்ளே அமிழ்தபானம் சிந்தும். உள்ளே அமிழ்தபானம் உண்ணுகின்ற மக்களுக்கு பசி வராது.

பசி இல்லையெண்றால் காமம் இருக்காது. பசி இல்லையென்றால் மலஜலம் இருக்காது. மலஜலம் இல்லையென்றால் அங்கே என்ன ஆகும்? பசி இல்லை.

எத்தாலும் அழியாத வடிவதிலே நானும் –அந்த தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றார்.

எந்தாயு மொன்றாக இனிதுறல்வேண் டுவனே – அப்ப தனிவடிவம், அது போன்ற தோற்றம் எனக்கு வேண்டும் என்றார். புண்ணியவாங்களுக்கு மட்டும்தான் இது கைகூடும், எல்லோருக்கும் கூடாது.

புலால் உண்டால் என்ன ஆகும்? நச்சுத்தன்மையான எண்ணங்கள்தானே வரும். நச்சுத்தன்மையான, விகாரமான, கீழ்த்தரமான, மூர்க்கத்தனமான எண்ணம் வரும்.

தயை சிந்தை வருமோ? வராது. புலால் உண்ணுகிறோம், பேராசை இருக்கே, எப்படியோ பொருள் சேர்க்கணும். இந்த புலால் உண்ணுவதால் யாரையாவது தாக்கியோ, மோசடி செய்தோ பொருள் சேர்க்கணும் என்பான்.

இன்னும் சிலபேர் ஆடு கோழி வெட்டுவதை கண்டு ரசிப்பார்கள். அதிலும் வினை சூழும். ஐயோ பாவம்! அப்படி இருக்கும்போது, எப்படி உனக்கு அந்த தனிவடிவம், காமம் அற்ற தேகம் வரும். காமம் அற்ற தேகம் வந்தால்தானே, காமம் அற்ற தேகம் வந்த போதே உனக்கு பசி அற்ற தேகம் வரும். பசி அற்ற தேகம் வந்தபோதே உனக்கு மல ஜலம் அற்றுப் போகும். மல ஜலம் அற்றுப் போனால் பரிணாம வளர்ச்சி இருக்காது. நரை திரை மூப்பு இருக்காது, மரணமும் இருக்காது.

இது போன்ற வாய்ப்பைப் பெற வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? புலால் உணவு மறுக்க வேண்டும். சுத்த சன்மார்க்க வேண்டுகோளை படித்த மக்களுக்கு, நிச்சயமாக அந்த உணர்வு இருக்கும், புலால் உண்ண மாட்டார்கள், உயிர்கொலை தவிர்த்து விடுவார்கள். உயிர்கொலை செய்வதை ரசித்தால் இன்னும் வன்மனம் இருக்கு நம்மிடம். ஐயோ கொடுமை! அந்த வன்மனம் நீங்கவில்லை. ஆடு  கோழி வெட்டுவதை பார்த்து அதை ரசித்தால் இன்னும் வன்மனம் இருக்கு நம்மிடம். எப்படி நமக்கு அருள் செய்யப்போகிறான்? அதைக் கண்டு இரக்கம் காட்ட வேண்டும். மகான் இராமலிங்கசுவாமிகள் அந்த இரக்க சிந்தனை வந்தது.

துண்ணெனக் கொடியோர்பிறவுயிர்கொல்லத்தொடங்கிய

போதெலாம்பயந்தேன்

கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக் கண்டகாலத்திலும் பதைத்தேன்

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ                                                                                                         தெல்லாம்

எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம் அறியும்.

                                               திருஅருட்பா – ஆறாம் திருமுறை – கவி எண் – 276

                உயிர்களைஇம்சை செய்யும்போது என்னால் தாங்க முடியவில்லைஎன்கிறார். அந்த அளவிற்கு மென்மைவந்தது அவருக்கு. அந்த அளவிற்கு மென்மையா? அந்த அளவிற்கு சாந்தமான மனம், இனிமையான மனம். மென்மையான மனம். இந்த மென்மையானமனதிற்கு என்ன உபாயம்? ஒன்றுமில்லை. எல்லாம்வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரை பூஜை செய்தேன், அன்னதானம் செய்தேன்.
                உண்மைக் கடவுளை புகழ்ந்து பேசினேன், புண்ணியம் செய்தேன். புண்ணியம் செய்யசெய்ய, பூஜை செய்யசெய்ய, வன்மனம் நீங்கியது. புண்ணியத்தாலும், பூஜையாலும்தான் வன்மனம் நீங்கும். உயிர்க்கொலை செய்தல், புலால் உண்ணுதல், பிறர் சொத்தை அபகரித்தல், எப்படியாவது வாழ வேண்டும் என்ற கற்பனையில் வாழ்தல். புண்ணியமும், பூஜையும் செய்திருந்தால் கற்பனையில் மூழ்க மாட்டான். அந்த கற்பனை அது செய்யணும், இது செய்யணும் என்பான். இந்த கதையெல்லாம் எங்ககிட்ட வைத்துக்கொள்ளாதே! அவனிடம் கற்பனை இருக்காது. புண்ணியம் செய்தால், பூஜை செய்தால் கற்பனை செய்யமாட்டான்.

      பூஜை பெரியோர்களை அழைக்க வேண்டும். மகான் இராமலிங்கசுவாமிகளே! மாணிக்கவாசகா! அருணகிரிநாதா! திருமூலதேவா! கருவூர்தேவா! நந்தீசா! இப்படி பெரியவங்களை அழைக்க வேண்டும். இப்படி அழைத்தால், நோக்கமென்ன என்று ஆசான் கேட்பார்கள். நான் தூய்மை உள்ளவனாக வாழ வேண்டும். மென்மையான மனது வேண்டும் எனக்கு, இரக்க சிந்தனை இல்லை எனக்கு, அரக்க குணத்தோடு வாழ்கின்றேன். அரக்க குணம் உள்ளவனுக்கு நீ இரக்கம் காட்டமாட்டாய் என்பதை நான் அறிவேன். அரக்க குணம் உள்ளவனாக இருக்கிறேன். இரக்க சிந்தை வேண்டும்.

     அதற்கு நீர்தான் அருள்செய்ய வேண்டும் என்று கேட்பார். பெரியவங்களை என்ன கேட்க வேண்டுமென்றால் இப்படி கேட்கணும். அப்போ செல்வம் வேண்டாமா என்றால், பெரியவங்க ஆசி இருந்தால் நீ எதை விரும்புகின்றாய் வேண்டுமென்பதை தருவான். அவனுக்கென்ன அள்ளிக் கொடுத்துவிட்டு போகிறவன்தானே! ஏன் பொய் சொல்ல வேண்டும்? பொருளாதாரத்தை அள்ளி வழங்குவார்கள். புண்ணியமும் பூஜையும் இருந்தால் பொருள் கிடைக்கும். புண்ணியமும் பூஜையும் இருந்தால் உயிர்கொலை செய்வதைக் கண்டு இதயம் நடுங்கும். உயிர்கொலை செய்வதைக் கண்டு ரசிக்கமாட்டார்கள். அது சரி, புண்ணியமும், பூஜையும் செய்தால் என்ன ஏற்படும்? மன்னிக்கும் மனப்பான்மை கிடைக்கும். மனைவி குற்றம் செய்தாலும் சரி, தாய் தந்தை குற்றம் செய்தாலும் சரி, மன்னிக்கும் மனப்பான்மை வர புண்ணியம் வேண்டும்.

     இல்லையென்றால் கடைசி வரைக்கும் அவனை பழி வாங்குவான். கடைசி வரைக்கும் பழி வாங்கும் எண்ணம் இருந்தால், அங்கே புண்ணியம் இருக்கவே முடியாது. மன்னிக்கும் மனப்பான்மை வேண்டுமெல்லவா? அதற்கு யாருடைய ஆசி வேண்டும்? பயிற்சி கொடுக்கலாமோ? நூலறிவு வருமா? நூலறிவு கொண்டு நமக்கு மன்னிக்கும் மனப்பான்மை வருமா? மன்னிக்கும் மனப்பான்மை வரவே வராது! நூலறிவால் வராது. பின்னர் எப்படி வரும் திருவருளால்தான் வரும். புண்ணியமும் பூஜையும் இருந்தால் மன்னிக்கும் மனப்பான்மை வரும். தலைவன் ஆசி இருந்தால், புண்ணியமும் பூஜையும் இருந்தால் ஜாதி வெறி இருக்காதய்யா!

     மனிதனை நரகத்திற்குள் தள்ளுவது ஜாதி வெறியே!

     மனிதனை நரகத்திற்குள் தள்ளுவது ஜாதி வெறியே!

மனிதனை நரகத்திற்குள் தள்ளுவது ஜாதி வெறியே!

எப்படிய்யா விடுபடுவேன் அதிலிருந்து என் மனது ஏற்றுக் கொள்ள மாட்டேன் எங்கிறதே. நான் என்னம்மா பாவம் செய்தேன்? அவன் இந்த ஜாதி, இவன் இந்த ஜாதி என்று நினைக்கின்றேனே, நீங்களெல்லாம் (ஞானிகளெல்லாம்) அப்படி இல்லையே, அந்த அளவிற்கு முன்னேறி விட்டீர்களே, அதற்கு எனக்கு உபாயம் இருக்கக் கூடாதோ?

அந்த ஜாதி வெறி நீங்கக் கூடாதோ?

உயிர்கொலை செய்வதை கண்டு ரசிக்கின்றேனே பாவி!

புலாலை, மாமிசம் உண்பதை சுவைத்துச் சாப்பிடுகின்றேனே பாவி!

பொருள் ஆசை உள்ளவனாக இருக்கின்றேனே பாவி!

கொடுங்கோபம் உள்ளவனாக இருக்கின்றேனே பாவி!

இதிலிருந்து நான் எப்படி விடுபடுவேன் தாயே?

என்னால் முடியவில்லையே தாயே, என்னால் விடுபட முடியவில்லையே தாயே, எனக்கு மனம் சாந்தப்படவில்லையே. நான் யார் குடியை கெடுத்தேன், நான் என்ன செய்தேன், ஏன் எனக்கு மனம் சாந்தம் அடையவில்லை? ஏன் விகாரமாக இருக்கிறது? அதிலிருந்து விடுபட அருள் செய்யக் கூடாதா? என ஆசானிடம் வேண்ட வேண்டும். அதற்கு ஆசான், “தம்பி! உனக்கு அருள் செய்கிறேன். புண்ணியத்தை செய்! புலால் உண்ணாதே! புண்ணியத்தை செய்! புண்ணியமும், திருவடி பூஜையும் செய்தால் அந்த சாந்தம் வருவதற்கு நான் அருள் செய்வேன். நீ நினைத்ததையெல்லாம் தருவேன்” மகான் இராமலிங்கசுவாமிகள் நான் நினைத்ததெல்லாம் தருவேன்.

ஆகவே, இரகசியத்தை வேண்டுமென்றால் என் திருவடியைப் பற்று.

ஞானம்பெற வேண்டுமென்றால் என் திருவடியைப் பற்று!

எல்லா நன்மைகளையும் பெற வேண்டுமென்றால் நான் இயற்றிய சுத்த சன்மார்க்க வேண்டுகோளைப் படி! நலம் பெறுவாய். சாந்தம் உண்டாகும். கணவன் மனைவி, கோபமாக பேசுவார்கள். ஒருவருக்கொருவர் கடுகடுப்பான முகம். என்ன காரணம்? பொல்லாத வறுமை சூழ்ந்திருக்கும். பொல்லாத வறுமை சூழ்ந்து அவனை அப்படியே பிச்சு தின்று கொண்டிருக்கும்.

கொடுத்த கடனை கேட்க அவன் வந்துவிடுவான், இவன் வந்து விடுவான் என்று பயம். இந்த கடன் சுமை தீரவும் தலைவன் அருள் வேண்டுமல்லவா? இதற்கு என்னய்யா உபாயம் என்றான். புண்ணியம் செய்ய காசு இல்லை என்று கேட்டான். புண்ணியம் செய்ய காசு இல்லையென்றால், ஆசானைக் கேள். பூஜை செய்ய பூஜை செய்ய செல்வம் பெருகும். செல்வம் பெருகும்போது நல்ல காரியம் செய்.

நீ பூஜை செய்தவுடன் என்ன செய்யும்? செல்வம் பெருகும். அதன் பிறகு என்ன கேட்கணும்? உன் திருவருளால் கிடைத்த இந்த செல்வம், உன் ஆசியால் கிடைத்த இந்த செல்வத்தை, ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து பசியாற்றுவதற்கு அறிவு இல்லையே தாயே! ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டுமென்ற எண்ணமே இல்லையே! இன்னும் லோபித்தனம் இருக்கே! இந்த பாவியிடம் லோபித்தனம் நீங்க நீர்தான் அருள் செய்யவேண்டும் என்று கேட்டால் அருள் செய்வார்கள்.

செல்வத்தைக் கொடுத்தார். செல்வந்தானே மகனே நீ கேட்டாய். செல்வத்தை அள்ளிக் கொடுத்து இருக்கின்றேன். இனி மேற்கொண்டு என்ன கேட்கணும். நீ கொடுத்த செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கு புண்ணியம் செய்து, அடியேன் புண்ணியத்தைப் பெற்றுக் கொள்ள அருள் செய்ய வேண்டும் என்று கேட்டாயா?

சொல்லிக் கொடுக்கவேண்டும் அவனுக்கு. சொல்லிக் கொடுத்தால் கேட்பான். இல்லையென்றால், அவனை திருத்த முடியாது. ஆகவே, சுத்த சன்மார்க்க வேண்டுகோள் முற்றுப்பெற்ற முனிவர், எல்லா வல்லமையும் உள்ள ஆசான் இராமலிங்கசுவாமிகள் இயற்றியது. அவரை நான் நினைக்காத நாளே இருக்காது. அப்படியெல்லாம் பூஜை செய்தவன் நான். பூஜை செய்து ஆசி பெற்றிருக்கின்றேன். என்னிடம் இன்னும் எத்தனையோ குறைகள் உண்டு என்னிடம் இருக்கின்ற குறைகளை என்னால் அறியமுடியவில்லை, குறைகளை சிந்திக்கிறேன். ஆம், நீயே பாவி! நீயே பாவி! இவ்வுலகத்தில் உள்ள அறுநூறு கோடி மக்களை விட பாவி. இந்த உலகத்தில் எத்தனை பஞ்சமாபாவி இருக்கின்றானோ அவனுக்கெல்லாம் தலைவன், பாவி என்று நினைக்கிறேன்.

ஆகவே, இதிலிருந்து நான் விடுபட நினைக்கின்றேன். ஆசானைக் கேட்கின்றேன். என் மனம் என்னை உயர்த்தி பேசுகிறது, நிலை உய்ரந்து விட்டாய் என்று, இதுபோல் என்னை உய்ரத்தி நினைப்பதே குற்றமாய் நினைக்கின்றேன். ஆகவே உலக மக்களில், எல்லா மக்களைவிட பாவி என்று சொல்லி, தினமும் ஆசானைக் கேட்கவேண்டும். இன்னும் கொடுமையாக பேசுவேன். இன்னும் வஞ்சமனம் இருக்கிறது. கொடுமையான மனது இருக்கிறது, இந்த நிலை மாறுவதற்கு ஆசானைக் கேட்க வேண்டும்.

நீங்களும் ஆசான் இராமலிங்கசுவாமிகளையும், மகான் மாணிக்கவாசகரையும், மகான் திருஞானசம்பந்தரையும் வணங்கி, கிடைத்தற்கரிய இந்த மானுடப்பிறவியை, உய்ரத்தி கொள்ள வேண்டும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கோள்ள வேண்டும் எண்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

நான் பேசுகின்ற இந்த சுத்த சன்மார்க்க வேண்டுகோளில் இன்னும் எத்தனையோ விசயங்களை, கல்வியுள்ள மக்கள், சான்றோர்கள் நிறைய பேசுவார்கள். சில கருத்துக்களை சுருக்கமாக சொல்லியிருக்கின்றேன். அதில் சில குறை இருக்கத்தான் செய்யும். கற்றுணர்ந்த பெரியோர்களும், தாய்மார்களும் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று முடிக்கிறேன் வணக்கம்.

ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 587
Total Visit : 209321

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version