ஆற்றல் தலைப்பட்டவர்க்கு.
-திருக்குறள்-தவம்-குறள் எண் 269
வள்ளுவன் சொல்லியிருக்கிறான். கூற்றம் குதித்தலும்- கூற்றம் என்றால் எமன். எமனிடம் தப்பித்தல்; எமனை வெல்லுகின்ற ஆற்றல் உண்டு. எமனிடமிருந்து தப்பிக்கலாம்.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு
தவம் செய்கிறான். ஆனால் மிக உறுதியாக ஆற்றல் தலைப்பட்டவர் என்றான். எடுத்துக் கொண்ட லட்சியத்தை, வைராக்கியவான்கள். வைராக்கியவான்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். வைராக்கியவான்களுக்கு அந்த வாய்ப்பு. நல்லபடி இருக்கும். அற்புத செயல் செய்வார்கள்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலாதார்.
திருக்குறள்-நீத்தார் பெருமை-குறள் எண் 26
செயற்கு அரிய செயல்களைச் செய்வான். என்னையா இவனுக்கு மட்டும் இவ்வளவு வல்லமை? என்றான். என்னையா யாராலும் செய்யமுடியாது. நீ என்ன சராசரி மனிதனையா பூஜை செய்கிறாய்? எப்போது பார்த்தாலும் எதோ சிந்தனை செய்து கொண்டிருக்கிறாய். வீண் முயற்சியில் ஈடுபடுவாய். அவன் அதற்கென்றே வந்தவன். நல்லபடி செய்வான். நல்ல காரியம் செய்வான். பெருமைக்குரிய காரியம்செய்து கொண்டே இருப்பான்.
மனத்தாலும் வாக்காலும் மன்னவொன்னா மோன
இனத்தாரே நல்ல இனத்தார்; – கனத்தபுகழ்
கொண்டவரும் அன்னவரே; -கூறரிய முத்திநெறி
கண்டவரும் அன்னவரே காண்.
என்பார் தாயுமானவசுவாமிகள். அவர் சொல்கிறார்.
மனத்தாலும் வாக்காலும் மன்னவொன்னா- என்னவென்றான். சிந்திக்கவே முடியாது. சிந்தனைக்கும் சொல்லுக்கும் எட்டவே எட்டாது. மனத்தாலும் வாக்காலும் மன்னவொன்னா- நெருங்க முடியாது.
மோன இனத்தாரே நல்ல இனத்தார். கனத்த புகழ் கொண்டவரும் அன்னவரே
ஆக அவர்கள் என்ன செய்வார்கள்? கனத்த புகழ் உள்ளவனாக இருப்பான். நல்ல சிந்தனை இருக்கும். தூய மனது இருக்கும். தயை சிந்தை இருக்கும். ஜாதி துவேசம் இருக்காது. மத துவேசம் இருக்காது. அன்புள்ளவனை மதிப்பான். பிறருக்கு உதவி செய்வான். இதையும் செய்வான். உலகத்தில் தான் இருக்கும் காலம் வரையில் அற்புதச் செயல் செய்து கொண்டே இருப்பான்.