உடல் ஆரோக்கியத்திற்கு என்ன அடிப்படை என்றால், உள்ளத்தில் ஆரோக்கியம் இருக்க வேண்டும்

உடல் ஆரோக்கியத்திற்கு என்ன அடிப்படை என்றால், உள்ளத்தில் ஆரோக்கியம் இருக்க வேண்டும்.
      உள்ளம் ஆரோக்கியப்படவில்லையே? பல பிரச்சனை இருக்கிறதே? கடன் சுமை இருக்கிறதே? மனைவிக்கு நோய் இருக்கிறதே? நீ ஏனைய்யா போட்டு உழற்றுகிறாய்? நீ சிந்தித்து எதற்காவது? உள்ளம் ஆரோக்கியமாக இருக்கிறது. உள்ளம் ஆரோக்கியம் ஒன்று புண்ணிய பலத்தால் வரும். அல்லது ஞானிகள் ஆசியால் வரும். அல்லது சான்றோர்கள் நூல் திருக்குறளைப் படித்தால் வரும். அப்ப உள்ளம் ஆரோக்கியம் அதனால் உடல் ஆரோக்கியம். உடல் ஆரோக்கியம் பக்திக்குத் துணையாக இருக்கும். அப்ப உடல் ஆரோக்கியமும் உள்ள ஆரோக்கியமும் பக்திக்குத் துணையாக இருக்கும். இதை யார் தருவார்?
     உடல், உள்ள ஆரோக்கியத்திற்கு யார் துணையாக இருப்பார்கள்? வேறு வழியே இல்லை. உனக்கு பூஜைதான்! பூஜை செய்தாலன்றி உள்ளம் ஆரோக்கியமாக இருக்காது. உள்ளம் சாந்தம். அப்ப உடல் சாந்தம். உள்ளம் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியம். ஆரோக்கியமானவர்கள் தினம் பூஜை செய்வார்கள். கவலைப்படுகின்ற மக்கள் தினம் பூஜை செய்ய மாட்டார்கள். பூஜை செய்யாவிட்டால் முன் செய்த வினை வந்துவிடும். முன் செய்த வினை என்ன செய்யும்? கடன் சுமை உண்டாக்கும். விவசாயம் சரியிருக்காது. தொட்டது துலங்காது. அப்ப முன் செய்த வினையை வெல்வதற்கு என்ன உபாயம்? பூஜைதான். பூஜை செய்ய செய்ய கடன் சுமை தீரும். விவசாயம் நன்றாக இருக்கும். தொழில் நன்றாக இருக்கும். உத்தியோகம் நன்றாக இருக்கும். எல்லாமே நன்றாக இருக்கும். ஆக ஒருபக்கம் புண்ணியம் செய்கிறான். இதற்கிடையில் என்ன செய்வார்கள், முன் செய்த வினையின் காரணமாக வறுமையும் பிரச்சனையும் வரும்போது, அதற்கென்ன உபாயம் என்று கேட்டான்.     செய் ஐயா! மாதம் இரண்டு பேருக்கு, ஐந்து பேருக்கு அன்னதானம் செய்யய்யா. தினம் தியானத்தை விடாதே ஐயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 725
Total Visit : 209459

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version